பதச் சேதம் | சொற் பொருள் |
| அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி அவரும் வெருவ வரும் அதிகாளம் | அமரும்: பொருந்திய, சிறந்த; அமரரினில்: அமரர்களில், தேவர்களில்; அதிகன்: உயர்ந்தவன்; வெருவ: அஞ்ச; அதி காளம்: கொடிய நஞ்சு, ஆலகாலம்; |
| அதனை அதகரண விதன அத பரிபுரணம் அமை அனவர் கரண அகில ஈச | அதகரண விதன: கரண விதன அத என்று அன்வயம். விதன: விசனம், துக்கம்; அத: ஹத, அழிக்கும்; பரிபுரண: பரிபூரண; பரிபுரண அமை அ(ன்)னவர்: பரிபூரணம் (சாந்தம்) அமைந்த அத்தகையவர்களுடைய; கரண: மனத்தில்; |
| நிமிர அருள் சரணம் நிபிடம் அது என உன நிமிர சமீரன் மய நியமாய | நிமிர: உயர்ந்து எழ; சரணம்: திருவடிகள்; நிபிடம்: நெருக்கம், அருகில்; உன: உன்ன, நினைக்க; நிமிர: (நினைத்த) மாத்திரத்திலேயே; சமீரன்: வாயு; சமீரன் மய: வாயுமயமாய், வாயு வேகமாய்; நியமாய: கடமையாக; |
| நிமிடம் அதனில் உ(ண்)ண வல சிவ சுத வர நினது பதவி தர வருவாயே | சிவசுத: சிவனார் மகனே; வர: சிரேஷ்டமான, உயர்ந்த; |
| சமரச அமர சுர விதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே | சமரச: சமாதானமாக, ஒற்றுமையாக; அமர, சுர: தேவர்கள்; விதர: பகைத்த; அசுர: அரக்கர்கள்; சரத விரத அயில்: சத்தியத்தையே விரதமாக உடைய வேல்; |
| தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத | என்ற தாள லயத்தில்; |
| எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமைய மகள் குமர எமது ஈச | எமர: எம்மவர்க்கு, எம்போன்றோருக்கு; இமைய மகள்: இமய மகள், உமையம்மை; |
| இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே. | இயலின் இயல்: தகுதி பொருந்திய; பர: மேலான; குரவ: குருநாதனே. |

அமரும் அமரரினில் அதிகன் ... சிறந்தவர்களான தேவர்களுக்கு மேம்பட்டவனான — தலைவனான — இந்திரனும்;

அயனும் அரியவரும் வெருவ வரும் ... பிரமாவும் திருமாலும் அஞ்சும்படியாக வருவதான,

அதிகாளம் அதனை ... ஆலகால விஷத்தால்

அதகரண விதன ... (ஏற்பட்ட) கரண விதன ஹத—மனத்தில் ஏற்பட்ட துன்பத்தை அழித்தவனே!

பரிபுரணமமை அ(ன்)னவர்கரண ... பரிபூரணமாக மனம் முழுதும் சாந்தம் அமைந்தவர்களுடைய மனத்தில் (உறைபவனே);

அகிலேச ... அகில ஈசனே, அனைத்துலகுக்கும் தலைவனே!

நிமிர வருள்சரண ... (எம்முடைய தாழ்விலிருந்து நாங்கள்) நிமிர்ந்து எழும்படியாக உன் திருவடியைத் தந்தருள வேண்டும்.

நிபிடம் அது என ... (ஆலகால விஷமானது எம்மை) நெருங்குகிறது என்று (தேவர்) முறையிட,

உ(ன்)ன நிமிர ... நினைத்த மாத்திரத்திலேயே

சமிரமய ... காற்றின் வேகத்தில்—சண்டமாருத வேகத்தில்

நியமாய ... (தன்னைச் சரண்புகுந்தாரைக் காப்பதே) கடமை என்று

நிமிடமதனில் உணவல ... நிமிஷ நேரத்தில் (கண்ணிமைக்கும் நேரத்தில்) அந்த நஞ்சை உண்ண வல்லவரான

சிவசுத வர ... சிவனாருடைய மகனே! உயர்ந்தவனே!

நினது பதவிதர வருவாயே ... உன்னுடைய குகசாயுஜ்ய பதவியைத் தருவதற்காக வந்தருள வேண்டும்.

சமரச அமர சுர ... ஒற்றுமையும் பெருந்தன்மையும் உள்ளவர்களான தேவர்களுக்கு,

விதரபர அசுர ... மாற்றார்—பகைவர்கள்—ஆன அரக்கர்களின் மேலே,

சரத விரதஅயில் விடுவோனே ... சத்தியத்தையே விரதமாகப் பூண்டதான வேலை எறிபவனே!

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத ... என்ற தாள கதியில்,

எமர நடனவித ... (உன்னுடைய அடியார்களாகிய) எம்மைப் போன்றவர்களுக்கு முன்னே பலவிதங்களில் நடனம் செய்வதான,

மயிலின் முதுகில்வரும் ... மயில்மீது ஏறி வருபவனே!

இமைய மகள்குமர எமதீச ... இமயாசலத்தின் மகளான உமையம்மையின் குமரனே! எம் இறைவனே!

இயலி னியல் ... தகுதி பொருந்தியதான

மயிலை நகரில் இனிதுறையும் ... திருமயிலை நகரத்திலே இனிதே வீற்றிருக்கும்

எமது பரகுரவ பெருமாளே. ... எங்களுடைய மேலான குருவே, பெருமானே.

சுருக்க உரை

ஆலகால விஷம் பொங்கியெழுந்து வருகிறது என்று தேவர்கள் முறையிட, சரணடைந்தவர்களை விரைவாகக் காத்தலே கடமையென்று அந்த விஷத்தைக் கண்ணிமைக்கும் போதிலே உண்டு அருளியவரான சிவனாருடைய உயர்ந்த மகனே! ஒற்றுமையும் பெருந்தன்மையும் உடையவர்களான தேவர்களுடைய பகைவர்களான அசுரர்களின்மேல் சத்தியத்தையே விரதமாகக் கொண்ட வேலைச் செலுத்தியவனே! தகுர்த தகுர்ததிகு… என்று பலவிதமான தாளகதிகளில், அடியவர்களாகிய எம்போன்றோரின் முன்னே நடமிடும் மயிலின்மேல் ஏறி வருபவனே! இமயகிரி ராஜனுடைய மகளான உமையம்மையின் குமாரனே! தகுதி மிக்கதான மயிலை நகரிலே இனிதே வீற்றிருக்கும் பெருமாளே!

தேவர் தலைவனான இந்திரனும், பிரமனும், திருமாலும் அஞ்சும்படியாகப் பொங்கியெழுந்த ஆலகால விஷத்தால் ஏற்பட்ட மனோதுக்கத்தை அதம் செய்தவனே! தாழ்வான நிலையில் வீழ்ந்து கிடக்கும் நாங்கள் நிமிர்ந்து உயரும்படி உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும். எங்களுக்கு உன்னுடைய குகசாயுஜ்ய பதவியைத் தருவதற்காக வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை