ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 190

திருந்செந்தில் திருப்புகழான இன்றைய பாடல் வல்லொற்றுகளே இல்லாமல், முழுக்க முழுக்க மெல்லொற்றுகளால் அமைந்த ஒன்று.  அதுபோலவே

Updated On :24 மார்ச் 2016, 7:07 am

திருந்செந்தில் திருப்புகழான இன்றைய பாடல் வல்லொற்றுகளே இல்லாமல், முழுக்க முழுக்க மெல்லொற்றுகளால் அமைந்த ஒன்று.  அதுபோலவே எழுத்துகளை கவனியுங்கள்.  எல்லா எழுத்துகளும் குறில்.  ஒவ்வோரடியிலும் கடைசி இரெண்டெழுத்துகள் மட்டும் நெடிலாக, அதுவும் அடுத்தடுத்த நெடிலாக அமைந்துள்ளன.  ஒவ்வோரடிக்கும் எழுத்துக் கணக்கு பிசகாமல் அமைந்திருக்கிறது.

முருகனுக்கும் வள்ளிக்கும் இடையில் நிலவும் காதலை வருணிப்பதென்றால் அருணகிரிநாதருக்கு ஒரு தனி உற்சாகம் பீறிடும் — சீதையை வருணிக்கும்போதெல்லாம் கம்பனுக்குப் பொத்துக்கொள்ளும் உற்சாகத்தைப்போல.  அடியார்களெல்லாம் அவன் பாதத்தில் தொண்டு செய்யும்படியாக இந்தப் பாடலின் இரண்டாவது அடி இறைஞ்சினால், மூன்றாவது அடியில் முருகன், வள்ளி பதத்தைத் தஞ்சமென்று புகுந்து நிற்பதைக் குறும்பாகக் காட்டுகிறார்.   இப்பாடல் இறைவன் தாளிணையில் தொண்டு செய்யும் பேற்றை வேண்டுகிறது.

இப்போது பாடலைப் பார்ப்போம்.

தந்தந்தந் தந்த தனந்தன
தந்தந்தந் தந்த தனந்தன
தந்தந்தந் தந்த தனந்தன - தனதானா

துன்பங்கொண்  டங்க மெலிந்தற 
நொந்தன்பும் பண்பு மறந்தொளி
துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி - லணுகாதே

இன்பந்தந் தும்பர் தொழும்பத
கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி
யென்றென்றுந் தொண்டு செயும்படி - யருள்வாயே

நின்பங்கொன் றுங்குற மின்சர
ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி
நின்றன்பின் றன்படி கும்பிடு - மிளையோனே

பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
குன்றெங்குஞ் சங்கு வலம்புரி
பம்புந்தென் செந்திலில் வந்தருள் - பெருமாளே.

</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/254767256&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.