ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 192

பாரதி பாடல்களில் அதிகம் அறியப்படாத சில பாடல்களுள், திருப்புகழ் சந்தத்தில் இயற்றப்பட்டுள்ள பாடல்களும் அடங்கும்.  பாரதி கவிதைத் தொகுப்பில் திருப்புகழ் சந்தத்தில் மூன்று பாடல்கள் உள்ளன.  அவற்றில் ஒன்று:

Updated On :24 மார்ச் 2016, 7:13 am

பாரதி பாடல்களில் அதிகம் அறியப்படாத சில பாடல்களுள், திருப்புகழ் சந்தத்தில் இயற்றப்பட்டுள்ள பாடல்களும் அடங்கும்.  பாரதி கவிதைத் தொகுப்பில் திருப்புகழ் சந்தத்தில் மூன்று பாடல்கள் உள்ளன.  அவற்றில் ஒன்று:

தோதக மெத்தனை யத்தனை கற்றவர்
சூகர மொத்தவர் கொக்குநி கர்ப்பவர்
சூதுபெ ருத்தவர் உக்ரம னத்தவர் சதியோடே

என்று தொடங்கும்.

இந்தத் ‘தோதகம்’ என்ற சொல்தான், இன்றைய திருப்புகழைப் பார்த்ததும் பாரதியை நினைவூட்டியது.  இவ்வளவு கடுமையான நடை உடைய பாடல் பாரதி பாடலாக இருக்காது என்று கருதுபவர்கள் உண்டு.  ஆனால் பாரதி பாடல்களில் — இன்றைய சூழலில் — பொருள் விளங்காத சொற்கள் பல உண்டு.  அது ஒருபுறமிருக்கட்டும். பொதுப்பாடல்கள் வரிசையிலே — எந்தக் குறிப்பிட்ட தலத்துக்கென்றும் இல்லாமல் — உள்ள பாடல்களில் ஒன்று இன்றைய திருப்புகழ்.  ‘தோதகம்’ என்று தொடங்குகிறது.  தோதகம் என்றால் வஞ்சகம் என்று பொருள்.

மனிதனுக்கு நூறு வயது வாழ்வதுகூட பெரிய வரம் என்று சொல்லமுடியாது.  நோயிலா வாழ்வே பெரிய வரம்.  நோய் வருத்துமானால், நூறு வயது வாழ்வு என்பது வரமா!  தண்டனையல்லவா!  இன்றைய பாடல் நோயிலாத வாழ்வைக் கேட்கிறது.  பாடலைப் பார்ப்போமா?

தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த - தனதான

தோதகமி  குத்த பூதமருள் பக்க

   சூலைவலி வெப்பு - மதநீர்தோய்

சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று

   சோகைபல குட்ட - மவைதீரா

வாதமொடு பித்த மூலமுடன் மற்று

   மாயபிணி சற்று - மணுகாதே

வாடுமெனை முத்தி நீடியப தத்தில்

   வாழமிக வைத்து - அருள்வாயே

காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த

   கானககு றத்தி - மணவாளா

காசினிய னைத்து மோடியள விட்ட

   கால்நெடிய பச்சை - மயில்வீரா

வேதமொழி மெத்த வோதிவரு பத்தர்

   வேதனைத விர்க்கு - முருகோனே

மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி

   மீளவிடு வித்த - பெருமாளே.

</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/254767315&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.