ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

பகுதி - 193

உன் மீது காதல் கொண்டவளும்; காட்டில் தினைப்புனம் காத்தவளும்; குறத்தி மகளுமான வள்ளியின் மணாளனே!

Updated On :24 மார்ச் 2016, 7:14 am

பதச் சேதம்

சொற் பொருள்

தோதகம் மிகுத்த பூதம் மருள் பக்க சூலை வலி வெப்பு மதநீர் தோய் தோதகம்: வஞ்சனை; பூதம்: ஐம்பூதங்கள்; மருள்: மயக்கம், மயக்கத்தால்; பக்க சூலை: விலாப்பக்கங்களில் ஏற்படும் சூலை (விளக்கத்தைப் பார்க்கவும்); வெப்பு: வெப்பம், ஜுரம்; மதநீர்: வீரியத்தோடு தொடர்புள்ள நோய்; தோய்: சேர்ந்து;
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா சூழ்: எங்கும் பரவி; குற்று: இடிப்பு (மண்டையிடி, தலையிடி); சோகை: ரத்தக் குறைவு; குட்டம்: குஷ்டம்;
வாதமொடு பித்தம் மூலமுடன் மற்று(ம்) ஆய பிணி சற்றும் அணுகாதே வாதம்: வாயு; மூலம்: மூலநோய் (Piles); ஆய: ஆகிய;
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே முத்தி: முக்தி;
காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா மாதினை விளைத்து: நல்ல தினையை விளைவித்து;
காசினி அனைத்தும்  ஓடி அளவிட்ட கால் நெடிய  பச்சை மயில் வீரா காசினி: உலகம்; ஓடி அளவிட்ட: உலகத்தின் பரப்பு முழுவதிலும் திரிந்து அளவெடுத்த;
வேத மொழி மெத்த ஓதி வரு(ம்) பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே வேதமொழி: வேதங்களை, அல்லது வேதத்தை நிகர்த்த திருமுருகாற்றுப் படையை;
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே. மேல்: முன்னர்; வெட்டி: நீக்கி;

தோதகம் மிகுத்த பூதம் மருள் ... வஞ்சனை நிறைந்தவையான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் மயக்கத்தால் (சமமற்ற தன்மையாலே) —

பக்க சூலை வலி வெப்பு மதநீர் தோய் ... விலாவின் பக்கத்திலே உண்டாகின்ற சூலை நோய்*, வலிப்பு, ஜுரம், விந்து தொடர்பான நோய்களெல்லாம் ஒன்றுசேர்ந்து;

(* பித்த சூலை, வாத சூலை, சிலேட்டும சூலை, வாதபித்த சூலை, சிலேட்டும பித்த சூலை, ஐயகண சூலை என்னும் சூலை நோய் ஆறு வகைப்படும்)

சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை ... எங்கும் பரவித் துன்பத்தை உண்டாக்கும் பெருவயிற்று நோய், இருமல், மண்டையிடி, ரத்தசோகை, பல வகையான குஷ்ட நோய்களான இவையெல்லாம்,

தீரா வாதமொடு பித்தம் மூலமுடன் மற்று(ம்) ஆய பிணி சற்றும் அணுகாதே ... வாயு சம்பந்தமான தீர்க்க முடியாத நோய்கள், பித்த நோய், மூலம், இன்ன வகையான நோய்களெல்லாம் என்னருகிலும் வராதபடி;

வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே ... வருந்துகின்றவனான என்னை, நீடித்த முக்திநிலை விளங்குகின்ற உன்னுடைய பாதத்தில் (பாதத்தின் நிழலில்) நன்கு வாழவைத்து அருளவேண்டும்.

காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா ... உன்மீது காதல் மிகவும் கொண்டவளும்; நல்ல தினையை விளைவித்தவளும்; காட்டிலே வாழ்ந்த குறத்தியுமான வள்ளியின் மணாளனே!

காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா ... உலகம் முழுவதும் ஓடியும் பறந்தும் திரிந்து அளவெடுத்த நீண்ட கால்களை உடைய பச்சைமயிலில் ஏறும் வீரனே!

வேத மொழி மெத்த ஓதி வரு(ம்) பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே ... வேதங்களை (அல்லது வேதமே நிகர்த்த திருமுருகாற்றுப் படையை) நிரம்ப பாராயணம் செய்துவரும் பக்தர்களுடைய வேதனைகளைக் களைகின்ற முருகா!

மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே. ...முற்காலத்தில் அசுரர்கள் இட்ட சிறையை உடைத்தெறிந்து தேவர்களை மீண்டும் அமராவதிக்குச் செல்லும்படியாக விடுதலை செய்த பெருமாளே!

சுருக்க உரை

உன் மீது காதல் கொண்டவளும்; காட்டில் தினைப்புனம் காத்தவளும்; குறத்தி மகளுமான வள்ளியின் மணாளனே!  வேதத்தையே நிகர்த்த திருமுருகாற்றுப் படையை நிரம்பவும் பாராயணம் செய்துவரும் பக்தர்களுடைய துக்கங்களை வேரறுக்கும் முருகனே!  முன்னர் அசுரர்கள் இட்ட சிறையை உடைத்தெறிந்து, தேவர்களை அவர்களுடைய அமராவதிப் பட்டணத்துக்கு மீண்டும் செல்லும்படி விடுவித்து அருளிய பெருமாளே!

வஞ்சனை நிறைந்த பஞ்சபூதங்களில் ஏற்படும் மயக்கங்களால் உண்டாவதான பக்கசூலை; வலிப்பு; சுரம்; விந்து தொடர்பான நோய்கள் யாவும் சேர்ந்தும்; எங்கும் பரவி வேதனையை உண்டாக்கும் பெருவயிற்று நோய், இருமல், இடிப்பது போல உண்டாகும் தலைநோவு; ரத்தமின்மை; பலவகையான குஷ்ட நோய்கள்; வாயு சம்பந்தமான தீராத நோய்கள்; பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள்; மூலம் இவற்றின்மேல் இன்னும் பலவகையான நோய்கள் எவையும் என்னைச் சற்றும் நெருங்கவும் முடியாமல் செய்து; வருந்தி நிற்பவனான என்னை, நீடித்த முக்திநிலை விளங்குவதான உன்னுடைய திருவடி நீழலிலே என்னைத் தங்கும்படிச் செய்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.