ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 194

தன் நெஞ்சத்துக்கே குற்றமென்று தெரிந்த ஒன்றை மேற்கொண்டு ஒழுவார்களேயானால் துறவியர்போல வேடந்தரித்து மிக

Updated On :24 மார்ச் 2016, 7:21 am

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்
-என்றார் வள்ளுவர்.

'தன் நெஞ்சத்துக்கே குற்றமென்று தெரிந்த ஒன்றை மேற்கொண்டு ஒழுவார்களேயானால் துறவியர்போல வேடந்தரித்து மிக உயர்ந்த புறத்தோற்றத்தைக் கொண்டிருப்பதால் என்ன பயன்' என்று கேட்கிறாரல்லவா, அந்தக் கேள்வி இந்த திருவண்ணாமலைத் திருப்புகழில் எதிரொலிக்கிறது.  இந்திரியங்களின் வலைக்குள் அகப்பட்டுக் கிடப்பவர்கள், தலையை மழித்துக் கொண்டாலென்ன, சடையை வளர்த்துக்கொண்டாலென்ன (மழித்தலும் நீட்டலும் வேண்டா) இடையில் காவித்துணியைக் கட்டிக்கொண்டாலென்ன, அல்லது புலித்தோலையே உடுத்துக்கொண்டால்தான் என்ன, மனத்தைச் சுத்தப்படுத்தி என் கவலைகளிலிருந்து என்னை விடுவித்தருள வேண்டும் என்று இப்பாடல் கோருகிறது.

தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த
தனன தனத்தத் தனந்த - தனதான

தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து

            சடையை வளர்த்துப் புரிந்து - புலியாடை

சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து

            தவமொரு சத்தத் தறிந்து - திருநீறு

கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து

            கதறு நிலைக்கைக் கமர்ந்த - எழிலோடே

கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து

            கவலை யொழித்தற் கிரங்கி - யருள்வாயே

அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து

            மமருல கத்திற் புகுந்து - முயரானை

அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து

            மறிவுள பத்தர்க் கிரங்கு - மிளையோனே

மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து

            வறிது நகைத்திட் டிருந்த - சிவனார்தம்

மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து

            மறமயி லைச்சுற் றிவந்த - பெருமாளே.

</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/254768648&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.