பதச் சேதம் | சொற் பொருள் |
அமுதம் ஊறு சொல் ஆகிய தோகையர் பொருள் உளாரை என் ஆணை உன் ஆணை என் அருகு வீடு இது தான் அதில் வாரும் என உரை கூறும்

அசடு மாதர் குவாது சொல் கேடிகள் தெருவின் மீது குலாவி உலாவிகள் அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள் தாராய்
| குவாது: குதர்க்கம் (perverse talk); கேடிகள்: கேடு செய்பவர்கள் (ஆங்கிலத்தில் கேடி KD என்று சொல்லப்படுவது Known Depredator எனப் பொருள்படும்); |
குமரி காளி வராகி மகேசுரி கவுரி மோடி சுராரி நிராபரி கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி
| குமரி முதலானவற்றுக்குப் பொருளைக் கீழே காணவும். |
குறள் ரூப முராரி சகோதரி உலக தாரி உதாரி பராபரி குருபராரி விகாரி நமோகரி அபிராமி

சமர நீலி புராரிதன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி

சவுரி வீரி முநீர் விட போஜனி திகிரி மேவு கையாளி செயாள் ஒரு சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா

திமிதம் ஆடு சுராரி நிசாசரர் முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு ஏய் ஒரு சில பசாசு குணாலி நிணம் உண விடும் வேலா
| திமிதம்: பேரொலி; சுராரி: சுரர் அரி= தேவர்களின் பகைவர்; நிசாசரர்: இரவில் உலவுபவர்களான அசுரர்கள்; கடாவி: செலுத்தி; ஏய்: ஏய்ந்த, கூடிய; குணாலி: ஆரவாரக் கூத்து; நிணம்: கொழுப்பு; |
திரு உலாவு சொணேசர அணாமலை முகில் உலாவு விமான நவோ நிலை சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே.
| சொணேசர: சோணேஸ்வரர்; அணாமலை: அண்ணாமலை; நவோநிலை: (கோபுரத்தின்) ஒன்பது நிலைகள்; |

அமுதம் ஊறு சொல் ஆகிய தோகையர் ... ஊறுகின்ற அமுதத்தைப் போல இனிய சொற்களைப் பேசும் மயில்போன்ற பெண்கள்,

பொருள் உளாரை என் ஆணை உன் ஆணை ... பணம் படைத்தவர்களிடம், ‘என்மேல் ஆணை, உன்மேல் ஆணை (என்னை நீங்கக்கூடாது),

என் அருகு வீடு இது தான் அதில் வாரும் என ... ‘என் வீடு அருகில்தான் இருக்கிறது, அங்கே வரவேண்டும்’ என்றெல்லாம் பேசுகின்ற

உரை கூறும் அசடு மாதர் குவாது சொல் கேடிகள் ... அசட்டு மாதர்கள்; குதர்க்கமாகப் பேசிக் கேடுவிளைவிப்பவர்கள்;

தெருவின் மீது குலாவி உலாவிகள் ... குலவியபடி தெருவிலே திரிபவர்கள்;தெருவில் சரசமாக குலவி உலவுபவர்கள்,

அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள் தாராய் ... இப்படிப்பட்டவர்களுடைய மாயவலை என்மீது படாமலும, நான் கெட்டுப் போகாமலும் இருக்க உன் அருளைத் தரவேண்டும்.

குமரி காளி வராகி மகேசுரி ... குமரி=சிறு பிராயத்தவள்; காளி=கரிய நிறங்கொண்டவள்; வராகி: வாராகி ரூபத்தவள்; மகேஸ்வரி;

கவுரி மோடி சுராரி நிராபரி ... கவுரி: பொன்னிறம் உடையவள் கௌரி; மோடி: மாயை; சுராரி: தேவர்களுக்குக் கண்போன்றவள்; நிராபரி: பொய்யற்றவள்;

கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி ... கொடிய சூலி: கொடுமையான சூலத்தை ஏந்தியவள்; சுடாரணி: ஒளிபொருந்தியவள்; யாமளி: பச்சை நிறமானவள்; மகமாயி ஆனவள்;

குறளு ரூப முராரி சகோதரி ... குறள் ரூப: வாமன வடிவம் கொண்ட; முராரி: முரன் என்னும் அசுரனை வதைத்த (திருமாலின்) சகோதரி;

உலக தாரி உதாரி பராபரி ... உலகதாரி: உலகத்தைத் தாங்கிக் காப்பவள்; உதாரி: தயாள குணம் கொண்டவள்; பராபரி: முதன்மையானவள்;

குருபராரி விகாரி நமோகரி அபிராமி ... குரு=சிவனுடைய, பராரி: கண்போன்றவள்; விகாரி: பலவிதமான வேறுபாடுகளைப் பூணவல்லவள்; நமோகரி: துதிக்கப்படுபவள்; அபிராமி: பேரழகுள்ளவள்;

சமர நீலி புராரிதன் நாயகி ... சமரநீலி: போரில் வல்ல துர்க்கை; புராரிதன் நாயகி: திரிபுரங்களை அழித்தவனின் தேவி;

மலை குமாரி கபாலி நல் நாரணி ... மலைகுமாரி: இமவான் மகள்; கபாலி: கபாலத்தை ஏந்தியவள்; நல் நாரணி: நற்குணம் வாய்ந்த நாராயணி;

சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி ... சலில(ம்): நீர்; சலிலமாரி: நீர்பொழியும் மேகத்தைப் போன்றவள்; மனோகரி: மனத்துக்குகந்தவள்; பரை: பராசக்தி; யோகியானவள்;

சவுரி வீரி முநீர் விட போஜனி ... சவுரி: வலிமை மிக்கவள் (சௌரி என்னும் திருமாலின் நாமம்); வீரி: வீரம் நிறைந்தவள்; முநீர்: கடல், பாற்கடல்; விடபோஜனி: ஆலகால விஷத்தை உண்டவள்;

திகிரி மேவு கையாளி செயாள் ... திகிரிமேவு கையாளி: கையிலே சக்கரத்தை ஏந்தியவள்; செயாள்: செய்யாள்—சிவந்தவளான இலக்குமி;

ஒரு சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா ... ஒரு: ஒப்பற்ற; சகல: எல்லா; ஒப்பற்ற எல்லா வேதங்களுமாய் விளங்கும் தாயான உமாதேவியின் பாலனே!

திமிதம் ஆடு சுராரி நிசாசரர் ... பெரிய ஆரவாரத்தோடு போரடிய தேவர்களின் பகைவர்களான அசுரர்களுடைய,

முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு ... ஒவ்வொரு தலையிலும் படும்படியாக ஆயுதங்களைச் செலுத்தி;

ஏய் ஒரு சில பசாசு குணாலி நிணாம் உண விடும் வேலா ... அங்கே ஒன்றுகூடிய சிலபேய்கள் ஆரவாரக்கூத்துடன் கொழுப்பு நிறைந்த மாமிசத்தை உண்ணும்படி வேலை விடுத்தவனே!

திரு உலாவு சொணேசர அ(ண்)ணாமலை ... மங்களம் நிறைந்த சோணாசலேஸ்வருடைய திருவண்ணாமலையில்,

முகில் உலாவு விமான நவோ நிலை ... மேகம் தவழும் கோபுரத்தினுடைய ஒன்பது நிலைகளையும் தாண்டி,

சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே. ... அந்தக் கோபுரத்தின் உச்சிமீது விளங்கித் தோன்றும் பெருமாளே!

சுருக்க உரை

சிறுபிராயத்தவளான குமரியும்; கரிய காளியும்; வராகியும்; மகேஸ்வரியும்; பொன்னிறம்கொண்ட கௌரியும்; மாயை விளைப்பவளான மோடியும்; தேவர்களுக்குக் கண்போன்றவளும்; பொய்யற்றவளும்; கொடிய சூலத்தை ஏந்தியவளும்; ஒளிபொருந்தியவளும்; பச்சை நிறத்தவளும்; மகமாயியும்; வாமன ரூபம் தாங்கியவனும், முரன் என்ற அசுரனை வதைத்தவனுமான திருமாலின் சகோதரியும்; உலகத்தைத் தாங்கிக் காப்பவளும்; தயாள குணம் கொண்டவளும்; முதன்மை பூண்டவளும்; குருபரனாகிய சிவனுக்குக் கண்போன்றவளும்; வேறுபாடுகளைப் பூணவல்லவளும்; வணங்கப்படுவளும்; பேரழகு கொண்டவளும்; போரிலே வல்லவளான துர்க்கையும்; திரிபுரம் எரித்தவனின் தேவியும்; இமவான் மகளும்; நாராயணியும்; நீர்பொழியும் மேகத்தை ஒத்தவளும்; மனத்தை ஆள்பவளும்; பராசக்தியும்; யோகியும்; பராக்ரமம் நிறைந்தவளும்; வீரம் செறிந்தவளும்; கடலிலிருந்து கிளம்பிய ஆலகால விஷத்தை உண்டவளும்; கையிலே சக்கரத்தை ஏந்தியவளும்; திருமகளும்; ஒப்பற்ற எல்லா வேதங்களாகவும் நிறைந்த தாயும் ஆன உமை அருளிய பாலனே!

அமுதம் போன்ற இனிய சொற்களைப் பேசிக்கொண்டு, பணம் உள்ளவர்களிடம், ‘என் ஆணை, உன் ஆணை, என்னைவிட்டு நீர் நீங்கக்கூடாது; என்வீடு அருகில்தான் உள்ளது; அங்கே வரவேண்டும்’ என்றழைக்கும் அசட்டு மாதர்கள், குதர்க்கமாகப் பேசிக் கேடு விளைவிப்பவர்கள், தெருவிலே கொஞ்சிக் குலவித் திரிபவர்கள்—இத்தகையோருடைய மாயவலையில் நான் சிக்கிக்கொண்டு, கெட்டு அழியாமல் உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை