பதச் சேதம் | சொற் பொருள் |
வேழம் உண்ட விளா கனி அது போல
| வேழம்: பழங்களைத் தாக்கும் ஒருவகை நோய்; விளாகனி: விளாம்பழம்; |
மேனி கொண்டு வியாபக மயல் ஊறி |

நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி
| மிண்டர்: அறிவற்றோர்; |
நானும் நைந்து விடாது அருள் புரிவாயே |

மாள அன்று அமண் நீசர்கள் கழு ஏற | அமண்: சமண; |
வாதில் வென்ற சிகாமணி மயில் வீரா
| சிகாமணி: சிகையில் (தலையில்) உள்ளதான மணி; |
காள கண்டன் உமாபதி தரு பாலா | காளம்: விஷம்; |
காசி கங்கையில் மேவிய பெருமாளே.

காள கண்டன் = விடமுண்ட கண்டனாகிய. உமாபதி = உமா தேவியின் கணவனான சிவபெருமான். தரு பாலா = பெற்ற பிள்ளையே. கங்கை = கங்கை நதிக் கரையில் உள்ள. காசியில் மேவிய பெருமாளே = காசித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

வேழ முண்ட விளாகனி யதுபோல ... வேழம் என்ற நோய் தாக்கிய விளாம்பழத்தைப் போல,

(இந்த நோயால் தாக்கப்பட்ட விளாம்பழத்தின் ஓடுமட்டும் அப்படியே இருக்கும்; உள்ளே இருப்பதான சதைப்பற்று இருக்காது. ஓடு உள்ளிடற்றதாக (hollow) இருக்கும்)

மேனி கொண்டு வியாபக மயலூறி ... உடலெங்கும் காம இச்சையானது ஊறிப் பரவி, (உள்ளே இருக்கும் சத்தெல்லாம் அழிந்து, உடல் என்ற வெறும் கூடுமட்டுமே எஞ்சியிருக்க)

நாளு மிண்டர்கள் போல்மிக அயர்வாகி நானு... அறிவற்ற மூடர்களைப் போல நானும் தினந்தோறும் தளர்ச்சியடைந்து,

நைந்து விடாதருள் புரிவாயே ... நைந்துபோய் வாட்டமடையாதபடி அருள்செய்ய வேண்டும்.

மாள அன்று அமணீசர்கள் கழுவேற ... அன்றொருநாள், நீசர்களாகிய சமணர்கள் கழுவிலே ஏறும்படியாக,

வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா ... வாதிட்டு வென்ற திருஞான சம்பந்தராக வந்த உயர்ந்த மாணிக்கமே, மயிலேறும் வீரனே!

காள கண்ட னுமாபதி தருபாலா ... விஷத்தை உண்டு கறுத்த கண்டத்தையுடையவரான உமாபதியின் பாலனே!

காசி கங்கையில் மேவிய பெருமாளே. ... கங்காதீரத்திலுள்ள காசி நகரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

சமண நீசர்கள் கழுவிலேறி மாளும்படியாக வாதிட்டு வென்ற திருஞானசம்பந்தராக வந்த சிகாமணியே! மயிலேறும் வீரனே! நஞ்சை உண்ட கண்டனும் உமாதேவியாரின் பதியுமான சிவபெருமானுடைய பாலனே!

வேழம் என்னும் நோயால் தாக்கப்பட்ட விளாம்பழமானது, உள்ளேயிருக்கும் சத்தையிழந்து, வெளிக்கூடு மட்டுமே மிஞ்சியிருப்பதைப் போல, மேனியெங்கும் காம இச்சை பரவி, நான் உள்ளே இருக்கும் சத்தை (சத்துவத்தை) இழந்து, வெறும் வெளிக்கூடாய் மிஞ்சிவிடாமலும்; மூடத்தனத்தில் திண்மையான உறுதியைக் கொண்ட மிண்டர்களைப் போல (மூடர்களைப் போல) நானும் உடல்தளர்ந்து மெலிந்து வாட்டமுறாமலும் அருள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை