ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 636

இறைவன் திருவடியைச் சிந்திக்கவும்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2017, 6:30 pm

துன்பங்களும் நோய்களும் அழியவும் எப்போதும் இறைவன் திருவடியைச் சிந்திக்கவும் கோரும் இப்பாடல் வேதாரணியத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 30 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளாகவும்; இரண்டு, ஏழு ஆகிய சீர்கள் இரண்டு குறில்களும் கணக்கில் சேராத இரண்டு வல்லொற்றுகளாகவும்; மூன்று, நான்கு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்கள் மூன்று குறிலும் ஒரு மெல்லொற்றும் கொண்டு அமைந்துள்ளன.

தானன தத்தத் தந்தன தந்தன தனதானா

சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி கழிகாமஞ்
      சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு துணையாதே

ஏழையெ னித்துக் கங்களு டன்தின முழல்வேனோ
      ஏதம கற்றிச் செம்பத சிந்தனை தருவாயே

ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை யெழுநாளே
      ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல்  மருகோனே

வேழமு கற்குத் தம்பியெ னுந்திரு முருகோனே
      வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.