ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 758

யாக்கையைப் பழிக்கும்

News image
Updated On :17 பிப்ரவரி 2018, 6:30 pm

யாக்கையைப் பழிக்கும் இப்பாடல் இராமேசுரத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 52 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் பன்னிரண்டாவது சீர் வரையிலான எல்லாச் சீர்களிலும் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கு நான்கு எழுத்துகள் அமைந்துள்ளன.


தானதன தானதன தானதன தானதன
                தானதன தானதன தானதன தானதன
                தானதன தானதன தானதன தானதன தனதான

வாலவய தாகியழ காகிமத னாகிபணி
               வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
               வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு பொருள்தேடி

வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
                        வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
                        மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல சிலநாள்போய்த்

தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
                        கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
                        சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி யுறுநாளிற்

சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
                        சோகைகள் மாலைசுர மோடுபிணி தூறிருமல்
                        சூழலுற மூலகசு மாலமெனெ நாறியுட லழிவேனோ

நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
                        யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
                        நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு மிளையோனே

நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
                        லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
                        ஞானகுற மாதைதினை காவில்மண மேவுபுகழ்ம யில்வீரா

ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
                        வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழ
                        மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் பொடியாக

ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
                       பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவே
                        யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.