மன மயக்கங்கள் அறவேண்டும் என்று கோரும் இப்பாடல் இராமேசுரத்துக்குரியது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு நெட்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் உள்ளன.
தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன தனதான
வானோர் வழுத்துனது பாதார பத்மமலர்
மீதே பணிக்கும்வகை யறியாதே
மானார் வலைக்கணதி லேதூளி மெத்தையினி
லூடே யணைத்துதவு மதனாலே
தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக
ளேதோ வெனக்கலவி பலகோடி
தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
சேறாடல் பெற்றதுய ரொழியேனோ
மேனாடு பெற்றுவளர் சூராதி பற்கெதிரி
னூடேகி நிற்குமிரு கழலோனே
மேகார வுக்ரபரி தானேறி வெற்றிபுனை
வீரா குறச்சிறுமி மணவாளா
ஞானா பரற்கினிய வேதாக மப்பொருளை
நாணா துரைக்குமொரு பெரியோனே
நாரா யணற்குமரு காவீறு பெற்றிலகு
ராமே சுரத்திலுறை பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


