ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

திருப்புகழ் - 760

மன மயக்கங்கள் அறவேண்டும்

News image
Updated On :20 பிப்ரவரி 2018, 9:41 am

மன மயக்கங்கள் அறவேண்டும் என்று கோரும் இப்பாடல் இராமேசுரத்துக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு நெட்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் உள்ளன.


தானா தனத்ததன தானா தனத்ததன
                தானா தனத்ததன தனதான

வானோர் வழுத்துனது பாதார பத்மமலர்
                        மீதே பணிக்கும்வகை யறியாதே

மானார் வலைக்கணதி லேதூளி மெத்தையினி
                        லூடே யணைத்துதவு மதனாலே

தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக
                        ளேதோ வெனக்கலவி பலகோடி

தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
                        சேறாடல் பெற்றதுய ரொழியேனோ

மேனாடு பெற்றுவளர் சூராதி பற்கெதிரி
                        னூடேகி நிற்குமிரு கழலோனே

மேகார வுக்ரபரி தானேறி வெற்றிபுனை
                        வீரா குறச்சிறுமி மணவாளா

ஞானா பரற்கினிய வேதாக மப்பொருளை
                        நாணா துரைக்குமொரு பெரியோனே

நாரா யணற்குமரு காவீறு பெற்றிலகு
                        ராமே சுரத்திலுறை பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.