ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 764

என்னையும் உன் அன்பர்

News image
Updated On :23 பிப்ரவரி 2018, 6:30 pm

‘என்னையும் உன் அன்பர் திருக்கூட்டத்தில் ஒருவனாக ஏற்ற உன் கருணையை என்ன சொல்லிப் புகழ்வேன்’ என்று வியக்கும் இப்பாடல் காஞ்சித் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழி;தது 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு மெல்லொற்றும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) இரண்டு வல்லொற்றுகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) ஒரு வல்லொற்றும் ஒரு மெல்லொற்றும் அமைந்துள்ளன.


தனதனந் தத்தத் தத்தன தத்தந்
  தனதனந் தத்தத் தத்தன தத்தந்
  தனதனந் தத்தத் தத்தன தத்தந் தனதான

கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்
  பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங்
  கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் திலும்வேலும்

கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங்
  கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்
  களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் சுழல்வேனைப்

புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம்
   பழையகங் கைக்குற் றப்புது முத்தம்
   புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் றுருகாஎப்

பொழுதும்வந் திக்கைக் கற்றஎ னைப்பின்
   பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
   பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன்றுளதோதான்

அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்
    தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந்
    தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந் தளபாரை

அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண்
    டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம்
    பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின் பொலமேருத்

தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன்
    றிணைசுமந் தெய்க்கப் பட்டநு சுப்பின்
    தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் பையினூடே

தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண்
    டறமிரண் டெட்டெட் டெட்டும்வ ளர்க்கும்
    தலைவிபங் கர்க்குச் சத்யமு ரைக்கும் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.