பதச் சேதம் | சொற் பொருள் |
படிறு ஒழுக்கமும் மடமனத்து
| படிறொழுக்கம்: வஞ்சனையுடன் |
பகடிகட்கு உ(ள்)ளம்மகிழ மெய்
| பகடிகட்கு: |
மிடி என பெருவடவை சுட்டிட
| மிடி: வறுமை; வடவை: |
விரகு கெட்டு அருநரகு விட்டு இரு
| விரகு: அழிவு நிலை; இருவினை: நல்வினை, தீவினை; அற: கெட; பதம் அருள்வாயே: |
கொடி இடை குறவடிவியை புணர்
| வடிவியை: அழகியை; கச்சியில்: |
குரவு செச்சை வெண்முளரி புத்து அலர்
| செச்சை: வெட்சி; வெண் முளரி: |
பொடி படப்பட நெடியவில் கொடு
| நெடிய வில்: நீண்ட வில் (இங்கே |
பொரு திரை கடல்நிருதரை படைபொருது
| திரைக்கடல்: அலைவீசும் கடல்; |
படிறொழுக்கமும் மடம னத்து உளபடி பரித்து உடன் நொடிபேசும்... வஞ்சனையோடு கூடிய நடத்தையை அறிவற்ற மனத்துக்குள்ளே வைத்துக்கொண்டு தந்திரமாகப் பேசுகின்ற,
பகடிகட்கு உள மகிழ மெய்ப்பொருள் பலகொடுத்து அற உயிர்வாடா... வெளிவேஷக்காரர்களுடைய மனம் மகிழுமாறு என் உடலையும் பொருளையும் பலகாலமும் கொடுத்து, உயிர் அடியோடு வாடும்படியாக நின்று,
மிடியெ னப்பெரு வடவை சுட்டிட விதன முற்றிட மிகவாழும்... வறுமை என்ற பெருந்தீ என்னைச் சுட்டெரிக்க அதனால் ஏற்பட்ட துன்பத்துடன் வாழுகின்ற,
விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினையறப் பதம் அருள்வாயே... இந்த அழிவுநிலை கெடவும்; இந்தப் பெரிய நரகத்திலிருந்து நீங்குவதற்கும்; என் இருவினைகளும் ஒழிவதற்காகவும் உன்னுடைய திருப்பாதங்களைத் தந்தருள வேண்டும்.
கொடியிடைக்குற வடிவியைப்புணர் குமர கச்சியில் அமர்வோனே... கொடிபோன்ற இடையைக் கொண்ட குறமகளும் அழகியுமான வள்ளியை மணந்த குமரனே! காஞ்சீபுரத்தில் வீற்றிருப்பவனே!
குரவு செச்சைவெண் முளரி புத்தலர் குவளை முற்றணி திருமார்பா .... குரா மலரையும் வெட்சிப் பூவையும் வெண் தாமமரையையும் புதிததாக மலர்ந்த குவளை மலரையும் நிறைய அணிகின்ற திருமார்பனே!
பொடிபடப்பட நெடிய விற்கொடு புரமெ ரித்தவர் குருநாதா... தூள்பட்டு அழியும்படியாக மேருமலையாகிய நீண்ட வில்லை வளைத்து, (சிரித்தே) திரிபுரங்களை எரித்த சிவபெருமானுடைய குருநாதனே!
பொருதிரைக்கடல் நிருதரைப்படை பொருது உழக்கிய பெருமாளே... எதிர்த்து எழுகின்ற அலைகளை உடைய கடலையும் அசுர்களையும் வேலாயுதத்தைக் கொண்டு போரிட்டு கலக்கிய பெருமாளே!
சுருக்க உரை:
கொடிபோன்ற இடையை உடைய குறக்குலத்து அழகியான வள்ளியை மணமுடித்த குமரனே! காஞ்சியில் வீற்றிருப்பவனே! குரா, வெட்சி, வெண்டாமரை, அன்றலர்ந்த குவளைப்பூ எல்லாவற்றையும் நிரம்ப அணிந்திருக்கின்ற மார்பனே! திரிபுரங்கள் பொடியாகும்படிய நெடிய வில்லான மேருமலையை வளைத்து, அவற்றைச் சிரித்தே எரித்த சிவபெருமானுடைய குருநாதனே! எதிர்த்து எழும் அலைகளைக் கொண்ட கடலையும் அசுரர்களையும் வேற்படையைக் கொண்டு போரிட்டுக் கலக்கிய பெருமாளே!
அறியாமை நிறைந்த மனத்தில் வஞ்சகத்தை நிறைத்துக்கொண்டு அந்த மனம் சொன்னபடியெல்லாம் தந்திரமாகபப் பேசுகின்ற வெளிவேஷக்காரர்கள் மகிழ்ச்சி கொள்ளும்படியாக என் உடலையும் பொருளையும் பலகாலம் வீணாக்கி என் உயிர்வாடினேன். தரித்திரம் என்னும் பெருநெருப்பு என்னைச் சுட்டெரிக்க அதனைத் தாங்க முடியாமல் துன்பமடைந்து வாடியபடி வாழ்கிறேன். இந்த அழிவு நிலை நீங்கவும்; இந்த நரகத்திலிருந்து நான் விடுபடவும்; என் இருவினைகளும் ஒழியவும் உன்னுடைய திருவடியைத் தந்தருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


