‘அடியேனைக் கொடிய நரகத்தில் விழாமல் காக்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு நெடிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.
தனனா தனனத் தனனா தனனத்
தனனா தனனத் தனதான
அருமா மதனைப் பிரியா தசரக்
கயலார் நயனக் கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத்
தணையா வலிகெட் டுடல்தாழ
இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்
றிளையா வுளமுக் குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
கிருபா தமெனக் கருள்வாயே
ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்
டுரமோ டெறிபொற் கதிர்வேலா
உறைமா னடவிக் குறமா மகளுக்
குருகா றிருபொற் புயவீரா
திருமால் கமலப் பிரமா விழியிற்
றெரியா வரனுக் கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்
றிருவீ தியினிற் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


