தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

12.12.1950: நடிகர் ரஜினிகாந்த் பிறந்த தினம்!

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கெய்க்வாட் ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

DIN

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கெய்க்வாட் ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார்

ரஜினிகாந்த் 12.12.1950 அன்று இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ராமோஜி ராவ் கெய்க்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தாய் மரணமடைந்தார்.  பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் அங்கே பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட காரணத்தால் ரஜினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

எனவே நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிகாராக அறிமுகமானார். அதன் பிறகு படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இன்றும் கோலோச்சி வருகிறார். 

பொதுவாக ரஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும். தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இதுவரை 160 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.