19.12.1934: இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் பிறந்த தினம் இன்று!

இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாட்டில் 19.12.1934 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் பிறந்தார்
19.12.1934: இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் பிறந்த தினம் இன்று!
Updated on
1 min read

இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாட்டில் 19.12.1934 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் பிறந்தார்.

இவரின் தந்தை பெயர் ஸ்ரீ நாராயண ராவ். ஜல்கானில் உள்ள எம். ஜே. கல்லூரியில் எம். ஏ. பட்டம் பெற்றார். பின்னர் அவர் மும்பையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று வக்கீலாகவும் பயிற்சி பெற்றார்.

மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினராக 1962 முதல் 1985 வரை இருந்தவர். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1991 முதல் 1996 வரை பணியாற்றினார்..2004 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநில ஆளுநராக வும் பணியாற்றினார்.  

ஜூலை 19, 2007இல் நடந்த இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பிரதிபா, தனக்கு எதிராகப் போட்டியிட்ட பைரன் சிங்க் ஷெகாவத் தை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com