26.11.1954: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனது பிறந்தநாள்
தமிழ் ஈழ விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 26.11.1954 அன்று இலங்கையின் வல்வெட்டித்துறையில் பிறந்தார்


தமிழ் ஈழ விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 26.11.1954 அன்று இலங்கையின் வல்வெட்டித்துறையில் பிறந்தார். 1972-ஆம் ஆண்டில் 'புதிய தமிழ்ப் புலிகள்' என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார்.
1975-ஆண்டு காலகட்டங்களில் ஈழத்து தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிக ஈடுபாட்டுடன் இயங்கி வந்தார். அப்பொழுது யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கை ராணுவத்தின் தீவிர கண்காணிப்புக்கு உள்ளானார்.
அதன் பின்னர் மே 5, 1976 அன்று 'புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம்' என்று இருந்த பெயரானது 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
உலகத் தமிழர்கள் அவரைத் தங்கள் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள். 1991-ல் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது.
இறுதியாக இலங்கை ராணுவத்துடன் நடந்த சண்டையில் ராணுவத்தினால் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...