ஜெயலலிதாவுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன?

கடந்த 20 மாதங்களில் இந்தியா அதன் இரண்டு பெரிய தலைவர்களும் கலைஞர்களுமான மு. கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை
ஜெயலலிதாவுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன?
Published on
Updated on
1 min read

கடந்த 20 மாதங்களில் தமிழகம் அதன் இரண்டு பெரிய தலைவர்களும் கலைஞர்களுமான மு.கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை இழந்து தவிக்கிறது. இந்த இரு அரசியல்வாதிகளின் மறைவு பெரும் அரசியல் சகாப்தத்தின் இறுதி என்று அழைக்கப்படுகிறது, காரணம் இவர்கள் இருவரும் பழுத்த அரசியல்வாதிகள் மட்டுமல்ல, செயல் வீரர்கள். தாம் வாழும் சமூகத்தில் என்றென்றும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்கள். மேலும் தமிழக மக்களின் மனதில் தனியிடம் பிடித்தவர்கள்.

டிசம்பர் 5, 2016 -  ஜெயலலிதாவின் மறைவு அன்று, அவரது கட்சியினர், ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமே துயரில் மூழ்கியது. போலவே இன்று, திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவருமான கருணாநிதியின் மரணம் அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் அதிர்ச்சியாக அளித்தது. 

ஜெயலலிதா ஆறு முறை முதல்வராக பதவி வகித்தவர். கருணாநிதியும் தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறை ஆட்சி புரிந்தார். 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 9-ம் முறையாக சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். 14-ம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. 2006-ம் ஆண்டு 13-வது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 5-ம் முறையாக முதல்வராகப் பதவியேற்றார். கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை 4 நாள்கள் நடத்தினார். தொடர்ந்து 14 மற்றும் 15-வது சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.

இரு வேறு துருவங்களாக இருந்தாலும், இருவரும் அரசியலில், சமூகத்தில் மாபெரும் சகாப்தங்களாகி மக்களின் மனதில் நிலைத்துவிட்டவர்கள். இவர்களது ஆழமான அரசியல் வாழ்க்கையைத் தவிர, நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரும் அரசியலில் நுழைவதற்கு முன் திரை உலகில் முத்திரை பதித்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஜெயலலிதா புகழ்ப்பெற்ற நடிகையாக இருந்த காலகட்டத்தில், அதற்கு முன்னரே கலைஞர் கருணாநிதி மிகப் பிரபல திரைக்கதை எழுத்தாளராகத் திகழ்ந்தார். இவர்கள் அரசியலில் நுழைவதற்கு முன்னர், 1966-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மணி மகுடம். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி, ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். மணி மகுடத்தின் திரைக்கதையை எழுதியவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com