மூடிய ஜன்னல்கள்; தொட்டில் மரங்கள்!
சென்னை, ஆழ்வார்பேட்டையிலிருக்கும் பலோúஸô ஆர்ட் காலரியில் "சென்னை நாள்' கொண்டாட்டத்திற்காக "மெட்ராஸ் - சில கோணங்கள்' என்னும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி இம்மாதம் 28-ம் தேதி வரை நடக்கிறது. பால் கான்


சென்னை, ஆழ்வார்பேட்டையிலிருக்கும் பலோúஸô ஆர்ட் காலரியில் "சென்னை நாள்' கொண்டாட்டத்திற்காக "மெட்ராஸ் - சில கோணங்கள்' என்னும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி இம்மாதம் 28-ம் தேதி வரை நடக்கிறது. பால் கான் என்னும் அமெரிக்கரும், மோகன்தாஸ் ராதாகிருஷ்ணன் என்னும் இந்தியரும் எடுத்திருக்கும் புகைப்படங்கள் கண்காட்சியை அலங்கரிக்கின்றன.
ஓர் அமெரிக்கரின் பார்வையிலும் ஓர் இந்தியரின் பார்வையிலும் சென்னையின் பல இடங்கள், பல கோணங்களில் பதிவாகியிருக்கின்றன.
கூட்ட நெரிசல், பராமரிப்பின்மை, மனிதனிடம் இயல்பாக வெளிப்படும் ஈகைக் குணம், மூடியிருக்கும் கதவுகள், ஜன்னல்கள், மாடிப்படியில் இறங்கிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணின் கால்கள், மஞ்சள், குங்குமப் பூச்சுடனும் நூல்களையும் தொட்டில்களையும் கட்டியிருக்கும் மரங்களில் வெளிப்படும் நம்பிக்கைகள்... இப்படி கவிதையாய் நம்முடன் பேசுகிறது அமெரிக்கரான பால் கானின் கேமரா மொழி!
""இந்த ஓவியக் கூடத்தின் இயக்குநர் சித்ரா என்னிடம் "சென்னை நாள்' கொண்டாட்டத்திற்காக ஓர் அமெரிக்கரான உங்களின் பார்வையில் சென்னையில் சில காட்சிகளைப் புகைப்படம் எடுத்துத் தாருங்கள் என்று கேட்டார். எனக்கு நிறையத் தயக்கங்கள் இருந்தன. வழக்கமாக சென்னையின் அழகு கொஞ்சும் கோயில் கோபுரங்களையும், மெரீனா கடற்கரையின் அழகையும் படம் எடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதேநேரத்தில் என்னுடைய நண்பர்கள், நடைபாதை மக்களின் துயரங்களையும் அவலங்களையும் படம்பிடிக்காதே என்று அன்புக் கட்டளையிட்டனர். எல்லாவற்றையும் கருத்தில்கொண்டுதான் சென்னையின் சுவர்கள், ஜன்னல்கள், தண்ணீர் டேங்குகள் போன்ற பொருள்களையும் அதன் பல்வேறு பயன்பாடுகளைப் பற்றியும் படம் எடுத்திருக்கிறேன். முழுவதும் எடுத்து முடித்த
பிறகு, இந்தக் கண்காட்சியைப் பார்க்கும் போது நிறைவாக உணர்கிறேன்'' என்றார்.
போக்குவரத்து விதிமீறல், சாலைகளில் வாகனங்களின் பெருக்கம், நீதிமன்ற கட்டடத்தின் பின்னணியில் சாலையிலிருக்கும் "லைட் போஸ்டி'ல் பறவைகள் கட்டியிருக்கும் கூடு... இப்படி மயிலிறகாய் நம்மை வருடுகின்றன மோகன் ராதாகிருஷ்ணனின் புகைப்படங்கள்!
""காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை நான் பார்க்கும் அரிதான காட்சிகள் எல்லாவற்றையும் என்னுடைய கேமராவில் சிறைப்பிடிக்க நினைப்பேன். புகைப்படம் எடுப்பதை நான் சிறந்த பொழுதுபோக்காக நினைக்கவில்லை. ஒவ்வொரு நாளையும் அர்த்தப்படுத்துவதாகவே நினைக்கிறேன்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...