ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

எல்லைக் கோடு: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது  

Updated On :21 ஆகஸ்ட் 2016, 12:04 pm

எல்லையோரம் இடையராமல் எதிரிகளின் தொல்லை
சொல்லிப்பார்த்தும் சீறிப்பார்த்தும் நல்லிணக்க மில்லை
கோடுபோட்டு நிற்கச்சொன்னால் கேட்பவரா யில்லை
போடுபோட்டு தாக்கிடினும் சுரணையேது மில்லை!
எல்லைக்கோடு வந்தகேடும் இறைவன்தந்த தில்லை
நல்லதலைமை தந்தசீலர் பிரியமிழந்த தில்லை
நாடுபிளக்க நாடியவர்  புரிந்துகொண்ட தில்லை
கேடிழைத்த கொடியவரும் தீயணைக்க வில்லை
கொல்லும் பகையே கொள்கைத் தீயாய்
அல்லும் பகலும் அழிவே தொழிலாய்
பொல்லார் எழுந்து இழிவே செய்ததால்
நல்லோர்  எழுதிய(து) எல்லைக் கோடு!
வல்லான் வகுத்த வாய்க்கால் வழியே
நெல்லும் பருப்பும் வாய்க்கும் வழியாய்
அல்லும் பகலும் உழைக்கும் மாந்தர்
எல்லைக் கோட்டால் பிழைப்பை மறந்தார்!
அமைதியை விரும்பும் பாரத நாட்டை
இமைபோல் காக்கும் போர்த்திறம் கூட்டி
அன்பைச் சொல்லும் பார்த்தனின் மொழியால்
இன்பச் செய்தியை எல்லையில் பொழிவோம்!
எல்லை களில்லா உலகம் இயங்க
நல்லவ ரெல்லாம் உதவிட வேண்டும்
எல்லா நாட்டிலும் அன்பை விதைத்தால்
எல்லைக் கோட்டிலும் இன்பம் ஓங்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.