எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீ கண் சிமிட்டினால்: ஆர்.வித்யா

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 12:18 pm

கவிதைமணி

சூரியன் கண் சிமிட்டினால்
கிரஹணக்காட்சி மறையாது மறையும்!
சந்திரன் கண் சிமிட்டினால்
வானில் மறையும் முதல் பிறை 
மனசுக்குள் அசையும் !
நட்சத்திரம் கண்சிமிட்டினால்
கிருத்திகை கொண்டாட்டம் !
மேகம் கண் சிமிட்டினால்
வானவில் வளையும்!
மீன் கண்சிமிட்டினால்
முத்துக்கள் கொட்டும் !
மரங்கள் கண்சிமிட்டினால்
பூக்கள் மலரும்!
‘நீ’ கண் சிமிட்டினால்
எனக்கு மட்டும் வெளிச்சம் கிட்டும்!
‘நான்’ கண் சிமிட்டினால்
உலகத்துக்கே ஆணவம் பிடிக்கும்!
‘ நீயும் நானும்’ அகலட்டும்
வெளிச்சம் உலகை ஆளட்டும்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.