வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நீ கண் சிமிட்டினால்: பேராசிரியர் கவிஞர் பு மகேந்திரன்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 10:37 am

கவிதைமணி

தீ பற்றி எறியும்
மழை பொழியும்
மலை தகடு பொடியாகும்
ஆறுகள் தானே வரும்
மாடுகள் சுயமிழக்காமல் ஓடும்
நீ கண் சிமிட்டினால்
இவைகள் எல்லாம் நடக்கும்

நடப்பது நிஜமாகுமா என்பது தான் கேள்வி
வார்த்தைகள் மட்டுமே இங்கு முதலாகிறது
கோடிகளில் புரள்கிறாய்- பத்தவில்லை
மாடி- மாடி வீட்டைக் கட்டிக் கொண்டே இருகிறது.
வைக்க இடமில்லாமல்
வேறு வேறு என அலைகிறாய்.
வாயில் போட்டதெல்லாம் பத்தாது
எழுதி வைத்ததையும்
மறைக்க-
மெல்ல  வைக்கிறாய்.
கல் எல்லாம்

நீ சிமிட்டினால் பொன்னாகிறது
உடல் எல்லாம்
நீ சிமிட்டினால் பிணமாகிறது
நீயே ராஜாவாகிறாய்
நீயே கையில் கொலைவாள் எடுத்துக்
கொலையும் செய்கிறாய்.
நீயே நீயே எல்லாம்
சாதித்தாய் நீ உன் சிமிட்டல்களில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.