வஞ்சம் செய்வாரோடு: கவிஞர் கு. அசோகன்

Updated on
1 min read

வஞ்சம் செய்வார்தனை வேண்டி
நட்பு கொள்ளாதடி கிளியே!
 கொஞ்சியே பேசிடுவார் !

குணக்குன்று நீயென்பார் !
மஞ்சத்து மல்லிகைப் போல
மனதார சிரிப்பதாக
மாய்மாலம் காட்டிடுவார்

வஞ்சம் செய்வாரோடு
இணக்கம் கொள்ளாதடி கிளியே!
துஞ்சும் விழிகளிடையே
இமைபோல நானென்பார்
வஞ்சக எண்ணத்தையே
நெஞ்சுக்குள் பதுக்கியே
செந்தேனாய் சொல்வாரடி!

கடுக்கென கோபம் கொண்டால்
கயவரென எண்ணாதடி கிளியே!
தடுக்கிவிழும் வேளையிலே
தாங்கி பிடிப்பவர் இவர்தானடி கிளியே!
கொடுக்குள்ள தேள்குணமாய்
கொண்டவர்தான் வஞ்சக எண்ணமடி
தடுத்துதான் விடவேண்டும்
தங்கமே தருவதென்றாலும் கிளியே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com