கவிதைமணி
தனிமையோடு பேசுங்கள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
யாருமற்ற ஒர்ப் பொழுதின் தனிமைதனில்தனித்திருக்கையில் மெல்ல காதருகில் கேட்கும் குரல்!ஆம்! தனிமை பேசுகின்றது!நலம் விசாரிப்புக்குப் பின் தனிமையிடம் கேட்டேன்!சுகம் தானே? சுகத்திற்கென்ன குறைச்சல்!பின் ஏன் இந்த அலுப்பு?தனித்திருக்க விடமாட்டேன்கிறாயே?மோனம்தான் என் தவம்! மோனத்தை கலைத்துஎன் தவத்தை தின்று தீர்க்கிறாய்?ஒரு நொடியும் உன்னை பிரிவதில்லை கைபேசி!கணிணிமுன் காலம் கடத்துகின்றாய்?பெண்டாட்டி பிள்ளைகளை பிரிந்தாலும்உன் காதுகளைவிட்டு பிரியவில்லை செவிவாங்கிகள்!புத்தகங்களை தொலைத்துவிட்டாய்!நட்புக்களை பிரிந்துவிட்டாய்!தனிமைதனை உதறிவிட்டாய்!பின் எப்படி நான் சுகமாயிருக்க முடியும்!இன்று போல் என்றாவது ஒருநாளாவதுஎன்னோடு பேசு! என் இதயத்தை திற!உன்னோடு பேச ஆயிரம் கதைகள் உண்டு என்னிடம்!உன் கவசங்களை உதறி எறி!தனிமை நேசிக்கையில் பேசிக்கொண்டிருப்போம்!இனிமையாக கடந்து போகும் பொழுது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
