மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தனிமையோடு பேசுங்கள்: பி.பிரசாத்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 11:33 am

கவிதைமணி

"என் மகன்கள் என் மகள்கள்
நல் வாழ்வு காணவேண்டும் !"
அன்னை மனம் தனிமையிலும்
பேசும் மொழி இதுவாகும் !

"எந்த வித நிலைதனிலும்
நிதி நிலமை சீர்வேண்டும் !"
தந்தை மனம் தனிமையிலும்
வேண்டும் நிலை இதுவாகும் !

"வணிக மதில் பெருவகையாய்
பொருள் ஈட்டும் திறன்வேண்டும் !"
தனிமையிலும் வணிகர் மனம்
வேண்டும் வரம் இதுவாகும் !

தனிமையிலே பேசுவது என்றாலே
தன்னோடு தான்பேசும் நிலைதானே !
தனிமையிலே பேசும் போதும்
தன்னுடனே நீவேண்டும்
எனவேண்டும் எப்போதும்..
காதலரின் மனம் தானே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.