/
ஊழ்வினைதான் எனயெண்ணி அமைதி யாக உள்ளவாழ்க்கை போதுமென்போர் கோழை யாவர்வாழ்க்கையெனும் போர்க்களத்தில் எதிர்த்து நின்று வருகின்ற தடைகளினைத் தகர்க்க வேண்டும் !வீழ்த்துதற்கும் முதுகினிலே குத்து தற்கும் வினையாற்றும் உட்பகையை முறிய டித்தேஏழ்மைக்குத் துவளாமல் எழுச்சி யோடே எழுந்துழைத்தால் வறுமையிங்கே ஓடிப் போகும் !மூத்தோனாய்ப் பிறந்திட்டால் முதுகின் மீது மூட்டைகளாய்ச் சுமைகளினைச் சுமக்க வேண்டும்காத்திருந்தே இளையோரைக் கரையை ஏற்றிக் காவலனாய்க் குடும்பத்தைக் காக்க வேண்டும் !சூத்திரங்கள் புதிர்கணக்கை வடுவித் தல்போல் சூழ்ச்சிகளின் முடியவிழ்த்துப் பேண வேண்டும்ஏத்திவிடும் ஏணியாக வாழ்க்கை தன்னில் எதிர்பாராத் திருப்பங்கள் கடக்க வேண்டும் !பெற்றோர்கள் உடன்பிறந்தோர் மனைவி யோடு பெற்றெடுத்த குழந்தைகளின் தாக்கு தல்கள்சுற்றத்தார் சமூகத்தார் ஆட்சி யாளர் சூழ்ந்திருப்போர் கொடுக்கின்ற நெருக்கு தல்கள் !சுற்றுபுறம் நதிகாற்றில் மாசு சேர்த்து சுழன்றடிக்கும் இயற்கையதன் பேரி டர்கள்முற்றாக இவைகளிலே மூழ்கி டாமல் முன்னேறல் தாம்வாழ்வின் வெற்றி யாகும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
46 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

