வரம் தரும் விரதங்கள்
வரம் தரும் விரதங்கள்-அனுராதா ரமணன்; பக்.288; ரூ.120; தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை-20; )044-2441 4441.
ஆலயங்களில் நிகழும் அற்புதங்கள், வரலாறுகள், ஆலயங்கள் இருக்கும் இடங்கள், பலன் தரும் கோயில்கள் உருவாகக் காரணங்கள் போன்றவற்றைத் தெளிவாக விளக்கியிருக்கிறது நூல். நவக்கிரகங்களின் கதைகள், குணங்கள், கிரகங்கள் பெயர்ச்சியாகும்போது அவை தரும் பலன்கள் இவையனைத்தையும் கதை சொல்லுவது போலவே சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.
ஆலயங்களும் அதில் உள்ள தெய்வங்களும் அற்புதமான கோட்டோவியங்களாக புத்தகத்தில் இடம்பிடித்திருப்பது நூலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது. எந்த விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும். தெய்வங்களுக்குரிய மந்திரங்கள் எவை? அவற்றை எப்படிச் சொல்ல வேண்டும்? வேண்டியது விரைவாகக் கிடைக்க இறைவனை எப்படி அணுகிப் பெற வேண்டும்? இவை போன்ற அரிய ஆன்மிகக் கருத்துகளும், கதைகளும் மடை திறந்த வெள்ளம் போல நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளால் சிக்கித் தவித்து, துவண்டு விழுகின்ற போதெல்லாம் மருந்தாக இருக்கும் வகையில் மனித நேயத்தோடு படைக்கப்பட்டிருக்கும் அரிய ஆன்மிகப் பொக்கிஷம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.