தமிழ் எண்ணும் எழுத்தும்

தமிழ் எண்ணும் எழுத்தும் - மணி.மாறன்; பக்.124; ரூ.80; சரஸ்வதி மகால் நூல் நிலையம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்.
Published on
Updated on
1 min read

தமிழ் எண்ணும் எழுத்தும் - மணி.மாறன்; பக்.124; ரூ.80; சரஸ்வதி மகால் நூல் நிலையம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்.

இந்நூல் தமிழ்ச் சுவடியியல் பயிற்சியின் போது பயிலரங்கத்தில் பங்கு பெற்றவர்களுக்கு, பெறுபவர்களுக்குத் தேவையான பயிற்சி நூல் இல்லாத குறையைப் போக்கியுள்ளது.

காலந்தோறும் தமிழ் எண்கள், எழுத்துகள் பெற்ற மாற்றங்களை விரிவாகப் பதிவு செய்துள்ளது. சுவடியில் பயின்றுவரும் கூட்டெழுத்துகள், குறிப்பெழுத்துகள், சுவடிகளின் வரலாறு, ஓவியம், சிற்பம், எண்கள், கிரந்த எழுத்துகள் போன்றவற்றால் அறியப்படும் செய்திகள், சோழர்கால கல்வெட்டு எழுத்துகள், தமிழி மற்றும் வட்டெழுத்துகள், பழைமையான நூல்களில் இடம்பெற்றுள்ள ஆண்டுகள், அவற்றைக் கணக்கிட உதவும் முறைகள், பதிவேடுகளின் பெயர்கள், காகித ஆவணம் போன்றவற்றில் காணப்படும் சொற்றொடர்கள், அறியப்படாத அரிய புகைப்படங்கள், அட்டவணைகள், பட்டியல்கள், உ.வே.சாமிநாதையர் பதிப்பித்தவை, பொய்யடிமை இல்லாத புலவர் சிற்பம், சைவர்களுக்கும் சமணர்களுக்கும் நடந்த புனல் வாதத்தில் நீரில் ஏடு விடும் நிகழ்ச்சி, மதுக்கூரில் உள்ள சோழர் காலத்திய மாணிக்கவாசகரின் செப்புப் படிமம் என அனைத்தையும் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர்.

"ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ள செய்திகளை அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாக ஒரு கட்டில் உள்ள சுவடிகள் ஒருவரால் எழுதப்பட்டிருந்தால் முதலிரு ஏடுகளைச் சிரமப்பட்டு படித்தால் அவர் எழுதுகின்ற முறை நமக்குப் புரிந்து போகும். அதனை மனதில் கொண்டால் அடுத்த ஏடுகள் அவரது கையெழுத்துப் பழக்கப்பட்டதால் படிக்க எளிதாகிவிடும்' என்று ஏடு படிக்க எளிய வழிமுறைகளைக் கூறியுள்ளார்.

பயிற்சிக்காக என இரண்டு மூன்று கல்வெட்டுகளும் அதைப் படிக்கும் முறையையும் குறிப்பிட்டிருப்பது நூலின் சிறப்பு என்றால், அதில் ஒளவையாரின் விநாயகர் அகவலின் கல்வெட்டை வெளியிட்டிருப்பது அதைவிடச் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com