இனிய காண்க (தமிழ் இலக்கியம் - புதிய பார்வை)

இனிய காண்க (தமிழ் இலக்கியம் - புதிய பார்வை) - ம.திருமலை; பக்.220; ரூ.;160; மீனாட்சி புத்தகநிலையம், மதுரை-1; )0452 - 2345971.
இனிய காண்க (தமிழ் இலக்கியம் - புதிய பார்வை)
Published on
Updated on
1 min read

இனிய காண்க (தமிழ் இலக்கியம் - புதிய பார்வை) - ம.திருமலை; பக்.220; ரூ.;160; மீனாட்சி புத்தகநிலையம், மதுரை-1; )0452 - 2345971.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகிய நூல் ஆசிரியர், இன்றைய வாழ்க்கை மதிப்பீடுகளை பழைய தமிழ் இலக்கியங்களில் கண்டு நமக்கு இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார்; விளக்குகிறார். 
பண்டைய தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பல கருத்துகள் இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும் இந்நூல் உதவும். இன்றைய வாழ்க்கைக்கு பழைய இலக்கியங்கள் வழிகாட்டவும் செய்யும் என்பதை பல சான்றுகளுடன் இந்நூல் விளக்குகிறது. நூலாசிரியரின் வாழ்க்கை அனுபவங்களினூடே பல கருத்துகள் விளக்கப்படுவது உள்ளத்தைத் தொடுகிறது. 
"இனிய காண்க', "சங்க இலக்கியத்தில் உணர்வுசால் நுண்ணறிவு', "திருவள்ளுவர் குறிப்பிடும் மென்திறன்கள்', " தன் மதிப்புணர்வு', "ஆராய்ந்து தெளிதல்' உள்ளிட்ட 14 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தினமணியில் வெளிவந்த கட்டுரைகளும் உள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியங்கள் அக்காலச் சமூகச் சூழ்நிலையின் பின்னணியில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். எனினும் அந்த இலக்கியங்கள் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால், அவற்றில் சொல்லப்பட்ட கருத்துகள் இன்றைக்கும் பொருந்துபவையாக இருக்க வேண்டும். அப்படிப் பொருந்தும் கருத்துகளை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்நூல். இன்று என்பது நேற்றின் தொடர்ச்சி என்பதையும் புரிய வைக்கிறது. இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளைக் கூறும் பயனுள்ள நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com