தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு  -   ப.பாலசுப்பிரமணியன்; பக்.208; ரூ.200; சங்கர் பதிப்பகம்,  சென்னை - 49; 044 - 2650 2086.
தமிழர் வரலாறு
Published on
Updated on
1 min read

தமிழர் வரலாறு  -   ப.பாலசுப்பிரமணியன்; பக்.208; ரூ.200; சங்கர் பதிப்பகம்,  சென்னை - 49; 044 - 2650 2086.
இந்தியப் பகுதியில்தான் பூர்வ குடிகள் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றுகள் பல உள்ளன.  தொல் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, பெருகியதும் இந்தியாவில்தான்; மனிதனும் அங்குதான் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  
கி.மு. நான்காயிரம் ஆண்டுகள் வரை இந்தியா முதல் பாரசீகம், எகிப்து, சைப்ரஸ், கிரேத்தா வரையில் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களே வாழ்ந்தனர்; தென் பகுதியில் வாழ்ந்த மக்களே வடக்கிலும் இன்ன பிற இடங்களிலும் சென்று குடியேறினர்.
  இந்த உலகில் இல்லாத ஒரு நிலப்பரப்பு ஆஸ்திரேலியா; சகாரா பாலைவனம் முற்காலத்தில் கடலாக இருந்தது -   இவ்வாறு நாம் அறிந்ததும், அறியாததுமான பல்வேறு தகவல்கள் இந்நூலில் உள்ளன.  சிந்து சமவெளி நாகரிகம், குமரிக்கண்டம், கடல் கோள்கள், ஆரியர்களின் வருகை,  பழங்காலத் துறைமுகங்கள்,  பழந்தமிழரின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், தமிழ் அரசர்கள், தமிழர் குடியேற்றம், சுமேரியாவில் தமிழர் நாகரிகம், திராவிடம், திராவிடர்கள், பல்லவர்கள்,  விஜயநகரப் பேரரசு முதலிய 17 தலைப்புகளில் 'தமிழர் வரலாறு' கூறப்பட்டுள்ளது. 
  பூமியின் மையப் பகுதியில் மிகப்பெரிய கண்டம் இருந்ததற்கான புராண, இதிகாச சான்றுக்கு சைவ சித்தாந்த நூலான சிவஞானபோத மாபாடியத்தில் வரும் மாதவ சிவஞான யோகிகளின் பாடலை குறிப்பிட்டுக் காட்டியிருப்பது தனிச் சிறப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com