நல்லோரை நினைப்பதுவும் நன்றே!- நெல்லை சு.முத்து; பக்.312; ரூ.270; கங்கை புத்தக நிலையம், சென்னை-17. ✆044-24342810.
விஞ்ஞானியான நூலாசிரியர் தன்னைக் கவர்ந்த அனைத்துத் துறை ஆளுமைகளையும், அவர்களின் சிறப்புகளையும் விளக்குவதே இந்த நூல்.
மொழியியல் அறிஞர்கள், மகாகவி பாரதி உள்ளிட்ட கவிஞர்கள், நா.பார்த்தசாரதி உள்ளிட்ட படைப்பாளிகள், பத்திரிகை ஜாம்பவான்கள், அப்துல்கலாம் உள்ளிட்ட அறிவியலாளர்கள் என எழுத்துகளால் அறிமுகப்படுத்துகிறார்.
அப்துல்கலாம் சந்திப்பில், சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் குறித்த கலாமின் கருத்தானது, படிப்போரை வியக்கவைக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவுடனான சந்திப்பும், விஞ்ஞானம் குறித்த இளையராஜாவின் கருத்தையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு கட்டுரையிலும் ஓர் ஆச்சரியத் தகவல் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், மலையாள இலக்கியவாதிகளின் படைப்பில் எந்த அம்சங்கள், எந்த நோக்கில் இடம் பெற்றிருக்கின்றன என்கிற சிறிய ஆய்வும் உள்ளடங்கியிருப்பது நூலின் பெரிய பலமாகும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி தினம் உள்ளிட்ட தனக்குப் பிடித்தவற்றையும் அரிய பல தகவல்களுடன் கட்டுரையாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
இந்திய ஏவுகணை வரலாறு திப்பு சுல்தானிலிருந்து தொடங்குவதாகக் குறிப்பிடுவதுடன், அதுகுறித்து கலாம் தனது நூலில் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாழுகின்ற மக்களுக்கு வழிகாட்டும் நல்லோரை அறிமுகப்படுத்தும் நூலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.