
இலக்கியம் என்றால் என்ன (கருத்தரங்கக் கட்டுரைகள்)-தொகுப்பு: தமிழவன்; பக்.168, ரூ.240, சாகித்திய அகாதெமி, குணா வளாகம், 443, இரண்டாம் தளம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600 018.
தமிழ் ஆய்வாளர்கள் காலங்காலமாக இலக்கியம் குறித்த புதுப்புது விளக்கங்களை அளித்து வருகின்றனர். தமிழ் ஆய்வுத் தளத்தில் இலக்கியம் குறித்த சர்ச்சைகளும் ஓய்ந்தபாடில்லை என்றே கூறலாம். அந்த வகையில் இலக்கியம் என்றால் என்ன எனும் இந்த நூலானது, கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட 8 கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது.
நூலின் கட்டுரைத் தொகுப்பாளரான நூலாசிரியர், இலக்கியம் என்பது ஆழமானது எனக்கூறுவதுடன், அது அழகியல் சார்ந்ததா, மார்க்சிய கொள்கை சார்ந்ததா என்ற கேள்வியை எழுப்புகிறார். இலக்கியம் அறம் சார்ந்தது என வாதிடுவோரைச் சுட்டிக்காட்டி, மிகப்பல இலக்கியங்களையும், அவற்றின் தத்துவம், கோட்பாடு திறனாய்வு நூல்களையும் பல ஆண்டுகள் வாசிக்கும், விவாதிக்கும் அரிய மனங்களுக்கு மட்டுமே இலக்கியம் தென்படும் என்று கூறகிறார்.
முதல் கட்டுரையிலேயே இலக்கிய கோட்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. அதில் க.நா.சு.போன்றோரின் கருத்துகள், மார்க்சியவாதியான ஜார்ஜ்லூக்காஸ் கருத்துகள் மற்றும் இலக்கிய அறிவுவாதம் ஆகிய கோட்பாடுகளைப் பல கோணங்களில் அலசி ஆராய்ந்திருப்பது பாராட்டுக்குரியது.
கட்டுரையாளர்களில் சமயவேலின் 'ழான் பவுல் சார்த்தரின் சிந்தனையும் இன்றைய இலக்கியமும்' எனும் கட்டுரையில், எழுத்தை மையமாக்கிய கேள்விகளை முன்வைத்து இலக்கியத்துக்கு விளக்கம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார். சுதந்திரமான லட்சிய சமுதாயத்தோடு இலக்கியத்தை தொடர்புபடுத்தியதைச் சுட்டிகாட்டுகிறார். 'கலை இலக்கியமும் அதன் வகைமைகளும்' எனும் சாகிப்கிரான் கட்டுரை, இலக்கியம் முழு மனித வாழ்வின் ஊடுருவலாகக் குறிப்பிடப்படுகிறது. கவிதை, சிறுகதை, நாவல், திரைப்படம் என அனைத்தின் வழிநின்றும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து விளக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.