நுண்ணுயிருலகு

நுண்ணுயிரிகளின் மருத்துவ அறிவியலை எளிய தமிழில் விளக்கும் பொக்கிஷம் இது.
நுண்ணுயிருலகு
Published on
Updated on
1 min read

நுண்ணுயிருலகு - அ.லோகமாதேவி; பக்.150; ரூ.200; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், என்பிடிசி-எம்சிஇடி வளாகம், பொள்ளாச்சி - 642003. ✆ 99761 44451

மிகவும் சக்திவாய்ந்த, கண்ணுக்குத் தெரியாத அளவில் இருக்கும் நுண்ணுயிரிகளுடன் மனித வாழ்க்கை பின்னிப் பிணைந்துள்ளது. நுண்ணுயிரிகள் நோய்களைப் பரப்பும் அதேநேரத்தில் நோய் எதிர்ப்பிகளாகவும் செயல்படுகின்றன. நுண்ணுயிரிகளால் உலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பயன்கள், வரலாறு உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை 10 கட்டுரைகளில் இந்நூல் விவரிக்கிறது.

இரண்டாம் உலகப் போரின்போது லட்சக்கணக்கான வீரர்களை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்த பென்சிலின் மருந்தை அலெக்ஸôண்டர் ஃபிளமிங்கும் அவரது சகாக்களும் எப்படி கண்டுபிடித்தார்கள் என்ற உண்மைச் சம்பவத்தை முதல் கட்டுரை விவரிக்கிறது.

1984-85-இல் உலகில் எய்ட்ஸ் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருந்த போது, இந்தியாவிலும் எய்ட்ஸ் இருக்குமா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டபோது சென்னையில் எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதை முதல்முதலில் சென்னையில் அடையாளம் கண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சுநீதி, நிர்மலா, நூரி ஆகிய மூன்று பெண்களின் தியாகம் போற்றத்தக்கது.

வெறி நாய்க்கடியால் வரும் ரேபிஸ் நோய், சீஸ் பால்கட்டியை உருவாக்கும் நொதிகள், நர மாமிசம் உண்டதால் ஏற்பட்ட 'குரு' நோய், ஈஸ்ட் எனப்படும் சர்க்கரைப் பூஞ்சை, டைபாய்டு நோயை 59 பேருக்கு பரப்பிய பெண், புல்லரிசிப் பூஞ்சையால் ஏற்பட்ட நோய் குறித்தும் அதன் பின்னணியில் இருக்கும் நுண்ணுயிரிகள் குறித்தும் இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன.

மருத்துவ அறிவியலின் கற்பனைக்கு எட்டா வளர்ச்சிக்குக் காரணமான எண்ணற்ற விஞ்ஞானிகள், மருத்துவர்களின் தியாகத்தை இந்நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. நுண்ணுயிரிகளின் மருத்துவ அறிவியலை எளிய தமிழில் விளக்கும் பொக்கிஷம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com