
பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு) - ச.சரண்யா, பக்.192; ரூ.175; சரண் புக்ஸ், தியாகராயர் நகர், சென்னை 600 017. ✆ 97899 13700.
திமுக தலைவராகவும் தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்து மறைந்த அறிஞர் அண்ணாவின் முழுமையான வாழ்க்கை வரலாறு, பறவைப் பார்வையில் தரப்பட்டிருக்கிறது.
காஞ்சியில் அண்ணாவின் பிறப்பில் தொடங்கி, அவர் பள்ளி, கல்லூரியில் கல்வி கற்ற சூழலும், பேச்சுகளை மொழிபெயர்ப்பதில் தொடங்கி, நீதிக் கட்சியில் இணைந்ததும் பின்னர் பெரியார் ஈ.வெ.ரா.-வின் மூலம் அரசியலுக்குள் இழுக்கப்பட்டதும் விவரிக்கப்படுகிறது.
பெரியார் ஈ.வெ.ரா.வின் அழைப்பின் பேரில் திருவாரூர் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை வகித்ததும், 'விடுதலை'யில் இணைந்ததும் கூறப்படுவதுடன், இருவரிடையிலான பிணக்கும் தொடர்ந்து திமுகவின் தோற்றமும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கை விளக்கமும் தரப்படுகின்றன.
1967 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, ராஜிநாமா செய்துவிட்டு, முதல்வராகப் பொறுப்பேற்று, பின் எம்.எல்.சி.யாகவும் ஆனார்.
மாநிலங்களவையில் திராவிட நாடு பற்றிய முதல் பேச்சு, ஜனநாயகம், தேசியம் பற்றிய அண்ணாவின் பேச்சுகள், திராவிட நாடு கோரிக்கை, பின்னர் கைவிட நேரிடுதல், தமிழ்நாடு பெயர் மாற்றம் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.
அண்ணாவின் அரசியல் வாழ்வில் நடைபெற்ற போராட்டங்கள், உரைகள், விமர்சனங்கள், குறிப்பிடும்படியான சட்டப்பேரவை உரைகள் என்று பரவலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
அறிஞர் அண்ணா பற்றி தொடக்க நிலையிலுள்ள எளிய, அரசியல்சாராத வாசகர்களும் படித்தறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும் நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.