வாழ்க்கை வரலாற்று இலக்கியம்

மாணவர்கள், போட்டித் தேர்வர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.
வாழ்க்கை வரலாற்று இலக்கியம்
Published on
Updated on
1 min read

வாழ்க்கை வரலாற்று இலக்கியம்- முனைவர் அ.பிச்சை; பக்.201; ரூ.250; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை- 625 020; ✆ 90803 30200.

'பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக சாதனையாக இருக்க வேண்டும்' என்பார் அப்துல் கலாம்.

'வாழ்க்கை பல சோதனைகளும், வேதனைகளும் நிறைந்தது. தோல்விகளும் வெற்றிகளும் கொண்டது. சில சறுக்கல்களும் பல முன்னேற்றங்களும் உடையது. அந்த வகையில், அனுபவசாலிகள், எழுத்தாளர்கள் தங்களது வாழ்வை சில குறிப்புகளாக எழுதினர். இவ்வாறு பல்வேறு வடிவங்களில் அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், இலக்கியப் படைப்பாளர்கள், அறிவியல் அறிஞர்கள் குறித்த நூல்கள் சுருக்கமாகவும், விளக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன. இந்த வகையில், 2005 வரை வாழ்க்கை வரலாற்று இலக்கியம் குறித்து இரண்டு திறனாய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. அதன்பிறகு வந்துள்ள பெரும்பாலான வாழ்க்கை வரலாற்று நூல்களைத் தொகுத்து இந்த நூலை அளித்துள்ளார் நூலாசிரியர்.

அந்த வகையில், நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த அலசலை நூலாசிரியர் விளக்கியுள்ளார். இதோடு, பிரபலங்களின் கடிதங்கள், நேர்காணல்களும் உள்ளன.

அப்துல் கலாம், மு.கருணாநிதி, உ.வே.சா., பம்மல் சம்பந்த முதலியார் உள்பட பல்வேறு ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாகவும், வித்தியாசமான தகவல்களாகவும் நூல் முழுக்க நிரம்பியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை ஒற்றை நூல்களில் படித்துவிட முடிகிறது என்ற எண்ணம்தான் படித்து முடித்தவுடன் ஏற்படுகிறது.

பின்இணைப்பாக, தொகுக்கப்பட்ட நூல்கள் குறித்த தகவல்கள் இணைக்கப்பட்டிருப்பது மேலதிகத் தகவல்கள் வேண்டுவோருக்கு உபயோகமாக இருக்கும்.

இரு நூற்றாண்டுகளில் உள்ள தமிழ் ஆளுமைகளில் பெரும்பாலானோர் குறித்த அறிமுக நூல் இது என்றே சொல்லலாம். மாணவர்கள், போட்டித் தேர்வர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com