தொரசாமி

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து கல்வி கற்று வெளிவரும் ஒருவர் சந்திக்கும் சவால்கள் எத்தனை வலுவானது என்பதை ஆசிரியர் கூறிச் செல்கிறார்.
தொரசாமி
Published on
Updated on
1 min read

தொரசாமி-ஜெ.அன்பு ; பக். 222; ரூ.299; அறம் பதிப்பகம், ஆரணி-632 316; ✆ 91507 24997

போராட்டங்களாலும் பண்பாட்டு அடையாளங்களாலும் நாம் சார்ந்து இருக்கும் சமூகத்தில் மாற்றங்களை கொண்டுவர முடியாது. அதற்கு கல்வியும் வாசிப்பும் கட்டாயம் தேவை. அதுதான் சமூக வேலியை உடைத்து தனக்கான சுதந்திரத்துக்கு ஒரு பெரும் குரலை எடுத்துச் செல்லும் என்பதைத்தான் தொரசாமி நாவல் சொல்கிறது.

ஒரு வரலாற்று நிகழ்வை தற்கால சமூக மாற்றத்துக்கான சாரமாக அலசி, அதிலுள்ள சம்பவங்களால் ஏற்பட்ட ஜாதிய அடக்குமுறை அதன் வழியாக கல்வி மறுப்பு என்ற அடிப்படை உரிமையைப் பெறுவதற்கு எத்தனை தடைகளை உடைக்க வேண்டும் என்பதை நாவல் ஆசிரியர் கூறுகிறார்.

பொருளாதார சுதந்திரமின்மை மற்றும் தீண்டாமை போன்றவை தங்களை அண்டாமல் காக்க கிறிஸ்தவத்தை தழுவிய தென் திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்த சாம்பவர் என்ற சமூகத்தின் வாழ்வியல் வெளிச்சத்தில் காட்ட முயன்றிருக்கிறார் நாவலாசிரியர்.

சிறு சிறு அசைவுகளையும்கூட படைப்பாளி பதிவு செய்திருக்கும் விதமும், கதாபாத்திரங்களைத் தேர்வு செய்திருக்கும் நுட்பமும், கதைச் சூழலை வாசகனுக்கு தெரிவிக்கும் பாங்கும் பாராட்டுக்குரியது. இது நூலாசிரியரின் முதல் படைப்பு என்பதை அறிந்தால் வியப்பு மேலிடுகிறது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து கல்வி கற்று வெளிவரும் ஒருவர் சந்திக்கும் சவால்கள் எத்தனை வலுவானது என்பதை ஆசிரியர் கூறிச் செல்கிறார்.

தமிழில் இதுபோன்ற நாவல்களை முன்னணி எழுத்தாளர்கள் எழுதியிருந்தாலும் வந்திருந்தாலும், நூலாசிரியர் கொண்டு வந்திருக்கும் இந்த நாவலின் நடை அமைப்பு சலிப்பு தட்டாத வகையில், சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com