காதலும் சில கேள்விகளும்

இளம்தலைமுறையினரும், கருத்து வேறுபாடுகளைக் கொண்ட தம்பதியினரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
காதலும் சில கேள்விகளும்
Published on
Updated on
1 min read

காதலும் சில கேள்விகளும்- ராஜசங்கீதன்; பக்.132; ரூ.200; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83; ✆ 96003 98660.

2015-இல் இணைய செயலி வாயிலாக எழுதத் தொடங்கிய நூலாசிரியர், காதல் குறித்து அப்போது வாசகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், விளக்கம் அளித்துள்ளார். அதன் தொகுப்புடன், கூடுதல் தகவல்களைச் சேகரித்து இந்த நூலை அளித்துள்ளார்.

'இந்திய கலாசாரத்தில் காதலும், காமமும் இலைமறைவாய் இருந்தது. கோயில் சிற்பங்கள், குளங்களில் காதல் காட்சிகளுடைய சிற்பங்கள் இளம்தலைமுறையினருக்குத் தெரியும் வகையில் இருக்கும். பிரிட்டிஷார் வருகைக்குப் பின்னர், காதலும், காமமும் இந்திய மண்ணில் பேசுபொருளாக, வெளிப்படைத்தன்மைக்கு மாறிவிட்டது' என்று தொடங்கும் நூலாசிரியர், காதலிலும் திருமணத்திலும் நிலவும் பிரச்னைகள் குறித்து தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

'உறவுக்குள்ளே உற்றுநோக்க', 'உணர்வுகளைப் புரிந்துகொள்ள', 'பாலினச் சமத்துவத்தை நோக்கிச் செல்ல', 'அரசியல் தெளிவு பெற' என்ற நான்கு தலைப்புகளில் கட்டுரைகள் காதலையும், திருமணங்களையும் விரிவாக அலசுகிறது.

காதல் குறித்த புரிதலை பெற்றோருக்கும் இந்த நூல் உருவாக்குகிறது. சமூகம், பொருளாதாரம், பாலினம், அரசியல், உளவியல் நோக்கம் போன்றவையே காதலுக்கு எதிர்ப்புக் காரணிகளாக அமைகின்றன என்கிறார் நூலாசிரியர்.

இளம்தலைமுறையினரும், கருத்து வேறுபாடுகளைக் கொண்ட தம்பதியினரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

Summary

This is a must-read book for the younger generation and couples with differing opinions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com