பாண்டிய வழுதி

இந்நாவல் மொத்தம் 35 அத்தியாயங்கள் கொண்டுள்ளது. சரித்திர நாவல் விரும்பும் வாசகருக்கு இந்நாவல் ஒரு பரிசு.
பாண்டிய வழுதி
Published on
Updated on
1 min read

பாண்டிய வழுதி-கே. கனகபுஷ்பம்; பக்.174; ரூ. 170; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-600017; ✆ 044 24331510.

வரலாற்றுப் புதினம் படைப்பது என்பது சாதாரணமானது அல்ல. அது ஒரு காலம் காட்டும் கருவியாக வாசகர் மனதில் பதிந்து ஓர் உண்மைச் சம்பவமாகவே அதனை உள்வாங்குவார். அதை நாவலாசிரியர் உணர்ந்துதான் இந்தப்புதினத்தைப் படைத்துள்ளார்.

தமது முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு வீர வாளை இளவரசி மீட்க, தனது திருமணத்தை ஒத்திவைத்து பயணப்படும் கட்டத்திலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. தோழியிடம் ஆலோசனை செய்து, தந்தையிடம் ஆசி பெற்று, குலகுருவைச் சந்திப்பது, அதன் பிறகு அந்த வாளின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளுதல் என நாவலை வாசிப்பவரின் கரம் பிடித்து அழைத்துச் சென்று விடுகிறார் ஆசிரியர்.

மேலும் கானகம், அருவி, மலை, ஆறு, கடல், மேகக் கூட்டம் போன்ற இயற்கைச் சூழலை முன்நிறுத்தி சூரியன், நிலவு, நட்சத்திரம் போன்றவற்றைக் காலம் காட்டும் கருவியாக இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் ஒரு வாசகனை கதைக் களம் நடக்கும் இடத்துக்குக் கூட்டிச் செல்லும். மிக முக்கியமாக, மிகச் சவாலான விஷயமான பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டுதலில் நாவலாசிரியரின் திறன் வியக்க வைக்கிறது.

மன்னர் காலத்து பழக்கங்களின் ஒன்றான முழுநிலவு வழிபாட்டை , நாகக் கன்னி, குலவை ஒலி, படையல், காப்பரிசி, சேவல் பலி இப்படியாக வர்ணிக்கப்பட்டிருப்பதால் அந்த வழிபாடு அப்படியே நம் கண் முன் நிழலாடுகிறது.

மணலூரே பாண்டியர்களின் முதல் தலைநகரம், கீழடியே ஒரு தொழிற்பேட்டை என வரலாற்றுச் சான்றுகளும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நாவல் மொத்தம் 35 அத்தியாயங்கள் கொண்டுள்ளது. சரித்திர நாவல் விரும்பும் வாசகருக்கு இந்நாவல் ஒரு பரிசு.

Summary

This novel has a total of 35 chapters. This novel is a gift for readers who love historical novels.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com