தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

பாண்டியன் நெடுஞ்செழியன் இத்தனை போர்களையும் எவ்வாறு நடத்தி வெற்றி பெற்றான் என்பதை மிக சுவாரஸ்யமாகக் கூறும் சரித்திர நாவல் இது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
Published on
Updated on
1 min read

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் - எஸ்.ஆர். விவேகானந்தம்; பக்.336; ரூ.350; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21; ✆ 93805 30884.

சங்க காலத்து இலக்கியங்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் பாண்டிய மன்னர்களில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இளமையிலே அரசாளப் புகுந்து பல போர்களில் வெற்றி பெற்று சிறந்து விளங்கினார்.

"சேரன் நம் மீது போர்த்தொடுக்கப் போகிறானாம்... செம்பியனும் வேளிர் ஐவரும் அவனுக்குத் துணையாம்...எழுவரென்ன இன்னும் எத்தனை பேர் வந்தாலும் கலங்க மாட்டான் இந்தப் பாண்டியன்! என்னை இளையோன் என்று எண்ணிய அனைவரையும் அழித்தொழிப்பேன். அவர்தம் வெண்கொற்றக் குடைகளைக் கவர்ந்து வருவேன்! அவ்வாறு செய்யாவிடில் வாழும் நிலை கெடுத்த வளைந்த கோலன் என்று மக்கள் என்னை வசை பாடட்டும்! அமைச்சரே... நாடெங்கும் போர் முரசு ஒலிக்கட்டும்" என்று வெஞ்சினம் பொங்க கூறிய பாண்டியன் நெடுஞ்செழியனின் வயது

அப்போது 13. அவன் வெஞ்சினத்துடன் கூறியதைப் போலவே தலையாலங்கானத்துப் போரில் வெற்றியும் கொண்டான் என புறப்பாடல் கூறுகிறது. அது மட்டுமின்றி, கூடல் பறந்தலைப் போர், வாகைப் பறந்தலைப் போர் போன்ற போர்களிலும் வெற்றி பெற்றான்.

தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் அவனிடம் போர் ஆர்வம் இருப்பதைக் கண்ட மாங்குடி மருதனார் நெடுஞ்செழியனுக்கு அதை உணர்த்துவதற்காக மதுரைக் காஞ்சி என்ற நெடிய பாடலைப் பாடினார். பாண்டியன் நெடுஞ்செழியன் இத்தனை போர்களையும் எவ்வாறு நடத்தி வெற்றி பெற்றான் என்பதை மிக சுவாரஸ்யமாகக் கூறும் சரித்திர நாவல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com