உண்மை ஒன்றுதான்

அன்பு நிரம்பிய உணர்வே கடவுள்தன்மை எனச் சொல்லாமல் சொல்கிறார் நூலாசிரியர்.
உண்மை ஒன்றுதான்
Published on
Updated on
1 min read

உண்மை ஒன்றுதான்-ஆத்மஞானி செய்யாறு இ.சண்முகம்; பக்.60; ரூ.80; ஜோதி பதிப்பகம், சென்னை-600 037. ✆ 99401 90616.

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என்ற உச்ச ஞான உணர்வைப் பெற மெய்ஞானப் பயணமான இறைதேடல் குறித்த விளக்கங்கள்தான் இந்தப் புத்தகம். வேதாத்ரி மகரிஷியின் தத்துவங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்நூலில் அதுவே ஆதார சுருதியாக நிற்கிறது.

ஓடி ஓடித் தேடினாலும் காலன் வந்து கொய்து போனபின்பும் கிடைக்காத இறை ரகசியத்தின் இடத்தைப் படிப்படியாகக் காட்டுகிறது இந்த நூல். நம்முள் புதைந்திருக்கும் ரகசியத்தை வெளியே எத்தனைக் காலம் தேடினாலும் கிடைக்கப் போவதில்லை என்பதைத்தான், அந்த ஒற்றை உண்மை என்கிறார் நூலாசிரியர்.

ஓருயிராக தன்னைத்தானே உருவாக்கி, உறுப்புகள் பெற்று பரிணாம வளர்ச்சியின் உந்துதல் கருமையத்தில் கொண்ட பதிவென்று வாசிக்கும்போது அது ஆழ்ந்த ஏகாந்த அனுபவம். அந்த கரு மையத்தின் பதிவை உள்முக பயணத்தால் தேட உந்துகிறது இந்நூல்.

இஸ்லாத்தில் சொன்னதைப்போல் அல்லாஹ் தன் ரூஹை கொண்டே மனிதர்களைப் படைத்துள்ளான் என்ற அந்த ஒற்றைத் தத்துவத்தை 'தவம்' என்ற அறம் செய்து அறி என்கிறார்.

பெண்மையின் பெருமையை விளக்கும் அதிகாரம் சில ரகசிய இலகு வழிகளைக் காண்பிக்கிறது. அதை இரண்டு உதாரணங்களுடன் சொல்கிறார்; அவற்றை ஒரு சம்பவமாகப் பார்க்காமல் வெற்றிச் சூத்திரமாகப் பார்த்தால் அடுத்த அத்தியாயத்தில் சொன்னதைப்போல் வானம் வசப்படும்.

குரு ராகவேந்திரர் சொன்னதைப்போல் நாம் கடவுளாக முடியாது; ஆனால், அந்தத் தன்மையை அடையலாம். அதற்கு எல்லா உயிர்களும் இணைக்கப்பட்டிருக்கும் கருப்பொருளை அன்பு என்ற உணர்வு ஆள்கிறது. அந்த அன்பு நிரம்பிய உணர்வே கடவுள்தன்மை எனச் சொல்லாமல் சொல்கிறார் நூலாசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com