பன்னிருவர் பதினோராம் திருமுறை பிரபந்தப் பொருள் விளக்கம்

இந்த நூலை வாசிக்கும்போது, மூல நூல்களை வாசித்தறிய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.
பன்னிருவர் பதினோராம் திருமுறை பிரபந்தப் பொருள் விளக்கம்
Published on
Updated on
1 min read

பன்னிருவர் பதினோராம் திருமுறை பிரபந்தப் பொருள் விளக்கம்-அ.ஜம்புலிங்கம்; பக்.604; ரூ.600; இந்துமதி பதிப்பகம், சிதம்பரம்- 608 001; ✆ 93459 79726.

தேவாரம் பாடிய மூவரால் பாடப்பட்ட பதிகங்கள் சிதம்பரம் கோயிலில் நெடுங்காலமாக இருட்டறையில் வைக்கப்பட்டிருக்க, இவை மன்னர் இராசராசன் முயற்சியால் தில்லைவாழ் அந்தணர்கள் அளித்த செல்லரித்தவைகளில் எஞ்சியவை நம்பியாண்டார் நம்பிகள் வாயிலாக பதினோராம் திருமுறையாக உருப்பெற்றன.

சைவ சமய இலக்கியங்களுள் பதினோராம் திருமுறையில் திருவாலவாயர், காரைக்கால் அம்மையார், கல்லாடர், நக்கீரர், கபிலர், பரணர், அதிராஅடிகள், இளம்பெருமான் அடிகள், ஐயடிகள், காடவர்கோன், சேரமான் பெருமாள் (கழறிற்றறிவார்), பட்டினத்து அடிகள் ஆகிய 12 பேர் பாடிய நாற்பது சிற்றிலக்கியங்கள் அடங்கி, பல இலக்கிய வகைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த நூல்களைப் பற்றி நல்லதொரு பொருள் விளக்கத்தை நூலாசிரியர் அளித்துள்ளார்.

பள்ளிக் கல்வியிலும் சிறந்து, தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற நூலாசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் 35 ஆண்டுகள் பணியாற்றியவர். பிரபந்தப் பொருள் விளக்கம் குறித்து வெளிவந்த ஏனைய நூல்களில், சிறப்பிடத்தைப் பெறும் வகையில் தனது தமிழ்ப் புலமையால் எளிய, நல்லதொரு விளக்கத்தை அளித்துள்ளார்.

பன்னிருவரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும், சிவ பக்தியையும் கூறி, அந்தந்தப் பதிகங்களில் பிரபந்தப் பொருள் விளக்கத்தை எளிய தமிழில் அளித்துள்ளார். இந்த நூலை வாசிக்கும்போது, மூல நூல்களை வாசித்தறிய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.

மங்கையர்க்கரசியார், திலவகதியார், காரைக்கால் அம்மையார் ஆகிய சிவனடியார்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சைவ சமயத்துக்கு ஆற்றிய தொண்டும், பக்தி இலக்கியங்கள் படைத்தலும் இன்றைய காலத்தில் வியக்க வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com