ஓர்மைகள் மறக்குமோ!

பேருந்தில் ஆரம்பிக்கும் இந்த நூலின் பயணம், அந்தப் பேருந்தில் பயணித்த மாந்தர்களும் அவர்களின் வாரிசுகளும் இப்போது எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்ற பதிவுடன் முடிகிறது.
ஓர்மைகள் மறக்குமோ!
Published on
Updated on
1 min read

ஓர்மைகள் மறக்குமோ! மாஞ்சோலை: வாழ்வியலும் வரலாறும்- அரசு அமல்ராஜ்; பக்.240; ரூ.290; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்-629 001, ✆ 04652 278525.

திருநெல்வேலி மாவட்ட மக்களின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் இயற்கைக் கொடையான மாஞ்சோலை என்கிற மலையரசியின் குரல்கள் ரீங்காரமாக; சங்கீதமாக; சிணுங்கல்களாக; வலியின் முனகலாக; வெற்றிக் கொக்கரிப்பாக என பலவித ஒலிகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் காகித ஒலிப்பேழையாக இருக்கிறது இந்த நூல்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சோலை திருவிதாங்கூர் சமஸ்தானத்திடமிருந்து சிங்கம்பட்டி ஜமீனுக்கு கைமாறி பின்னர் பாம்பே-பர்மா வர்த்தக நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டு, அந்தக் குத்தகை வரும் 2028-ஆம் ஆண்டோடு முடிவு பெறுகிறது. அதன் பிறகு, இதை காப்புக்காடுகள் வரிசைக்கு அரசு மாற்றி இருக்கிறது. இதன் பிறகு இதன் வரலாறு என்ன ஆகுமோ என்பது தெரியாது என்பதை வாசிக்கும்போது பிரிவின் வலி மனதுக்குள் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.

52 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூலில் இந்த மலையின் இயற்கை அமைப்பைச் சொல்லும் விதத்தில் அழகியல் தெரிகிறது. அதன் வரலாற்றை சொல்லும் விதத்தில் வியப்பு மேலிடுகிறது. அதேவேளை தொழிலாளர்களின் போராட்டங்களையும், நடந்த படுகொலைச் சம்பவங்களைச் சொல்லும்போது மனதில் இருள் கவ்வுகிறது.

பள்ளிகள், அணைக்கட்டுகள், அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்கள், கடை வீதிகள், தனி நபர்கள், மருத்துவமனைகள், தேயிலைக் காடுகள் தோன்றிய விதம் எனச் சொல்வதற்கு ஏராளம் இருந்தாலும், எதையும் விட்டுவைக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் ஓர் ஆவணப் பெட்டகமாகவே இந்நூல் வெளிவந்திருக்கிறது.

பேருந்தில் ஆரம்பிக்கும் இந்த நூலின் பயணம், அந்தப் பேருந்தில் பயணித்த மாந்தர்களும் அவர்களின் வாரிசுகளும் இப்போது எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்ற பதிவுடன் முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com