மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!

8. வெண்ணிலா மதியம் தன்னை - பாடல் 1

சமணர்கள் செய்த சூழ்ச்சியால், நடுக்கடலில் கல்லுடன் கட்டப்பட்டு விடப்பட்ட அப்பர் பிரான்,

Updated On :9 டிசம்பர் 2015, 9:11 am

அதிகை வீரட்டம் - நேரிசை)

முன்னுரை

சமணர்கள் செய்த சூழ்ச்சியால், நடுக்கடலில் கல்லுடன் கட்டப்பட்டு விடப்பட்ட அப்பர் பிரான், சிவபிரானின் கருணையால் கல்லே தெப்பமாக மிதக்க, திருப்பாதிரிப்புலியூர் (தற்போது கடலூர் என்று அழைக்கப்படும் நகரம்) தலத்தின் அருகே கரையேறினார். சூலை நோயிலிருந்து தன்னை காப்பாற்றிய, அதிகை வீரட்டானத்துப் பெருமானார், அதன் பின்னர் சமணர்களால் விளைந்த பல கொடிய கொலை முயற்சிகளிலிருந்தும் தன்னைக் காத்த அதிகை வீரட்டானருக்கு நன்றி கூறும் முகமாக, கரையேறியவுடன் அதிகை சென்றார். அப்பர் பிரானின் வருகையை அறிந்த மக்கள், நகரை அலங்கரித்து, தெருக்களெங்கும் தோரணங்கள் கட்டி வரவேற்றனர். அப்பர் பிரானின் கோலத்தை விவரிக்கும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தைவரும் = மெல்ல வருடுதல், இங்கே இளகிய மனத்துடன் சிந்தித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். தாழ்வடம் = கழுத்தில் தொங்கிய உருத்திராக்க மாலை. எப்பொழுதும் பதிகங்கள் பாடிய வண்ணம் அப்பர் பெருமான் திகழ்ந்தார் என்பது இந்த பாடலிலிருந்து தெளிவாகின்றது. அதிகை வீரட்டானம் திருக்கோயிலுக்குள் சென்றபோது பாடிய பதிகங்களில் ஒன்றுதான் இந்த பதிகம்.

தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனியும் தாழ்வடமும்

நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகி

பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல்

மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே

பாடல் 1

வெண்ணிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி
விண்ணிலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டிலார்க்கே
அண்ணியார் பெரிதும் சேயார் அதிகை வீரட்டானாரே

விளக்கம்

அண்ணியார் = அருகில் உள்ளவர்: சேயார் = தொலைவில் உள்ளவர்: உண்ணிலா = உள்ளத்தினுள் விண்ணிலார் = விண்ணில்+ஆர், மேலுலகத்தில் நிலைபெற்று இருக்கும்: சிவபெருமான் நமது அருகில் இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், நாம் அவனை நினைத்து, கருத்தில் கொண்டு அவனைத் தொழ வேண்டும். அல்லையேல் நமக்கு சிவபெருமான் எட்டாத பொருளாகத்தான் இருப்பான். இந்த கருத்தை வலியுறுத்தும் பல திருமுறை பாடல்களை அருளாளர்கள் நமக்கு அளித்துள்ளனர். நால்வர் பெருமானர்களின் அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

காறாயில் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.15) நான்காவது பாடலில் திருஞானசம்பந்தர், அனைவருக்கும் தாயாகவும் தந்தையாகவும் திகழும் சிவபெருமான், அவனது அடியார்களுக்கு அருகிலும் மற்றையோருக்கு தொலைவிலும் உள்ளான் என்று கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அடியார்களுக்கு அண்மையனாக இருக்கும் சிவபெருமானின் நாமத்தை நாம் கூறினால், நம்மை வினைகள் அணுகாது என்றும் இங்கே சம்பந்தர் கூறுகின்றார். மேவுதல் = வந்து பொருந்துதல், அடைதல்:

தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள்
ஆயானே ஆய நல்லன்பர்க்கு அணியானே
சேயானே சீர் திகழும் திருக் காறாயில்
மேயானே என்பவர் மேல் வினை மேவாவே

சிவபெருமானின் திருநாமத்தை, ஐயம் ஏதுமின்றி அவன் நமக்கு அருள் புரிவான் என்ற நம்பிக்கையுடன் நாம் ஓத வேண்டும். அவ்வாறு இருக்கும் அன்பர்களுக்கு மிகவும் அருகில் இருப்பவன், வஞ்சனையால் (மனதினில் சந்தேகத்துடன் வாயளவில்) அவனது நாமத்தைக் கூறினால், அவன் நம்மிடமிருந்து மிகவும் தொலைவில் தான் இருப்பான் என்று தெளிவுபடுத்தும் பாடல் திருவீழிமிழலை பதிகப் பாடலாகும் (6.50.4). மேற்கண்ட பாடலில் சம்பந்தர் கூறுவதுபோன்று, அப்பர் பிரானும் சிவபெருமான், அனைத்து உயிர்களையும் தாயாக காப்பாற்றுகின்றான் என்று கூறுகின்றார். இவ்வாறு நமக்குத் துணையாக சிவபெருமான் இருப்பதை நாம் புரிந்துகொண்டு அவனைப் போற்றி வணங்கினால் தானே, அவன் நமக்கு அருகில் வர, நாம் அவனைச் சென்று அடையலாம். சந்தோக சாமம் என்பது சாமவேதத்தின் ஒரு பிரிவு.

தூயானை சுடர்ப் பவளச் சோதியானைத் தோன்றிய எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னைச் சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்
வாயானை மந்திரிப்பார் மனத்துளானை வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச்
சேயானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.19) பத்தாவது பாடலில் சுந்தரர், அடியார்களுக்கு அண்மையில் இருக்கும் சிவபெருமான், சிவநெறியிலிருந்து பேர்ந்து அவனை நினைக்காமல் இருப்போர்க்கு மிகவும் தொலைவில் இருக்கின்றார் என்று கூறுகின்றார். பேர்ந்தவர் = சிவபெருமானை நினைக்காமல் அகன்றவர்கள்: வாயார வாழ்த்தி மனதார நினைக்கும் அடியார்களுக்கு, தூயவரான சிவபெருமான் மிகவும் அண்மையில் உள்ளார் என்றும் இங்கே கூறுகின்றார். வித்தகர் = மிகுந்த திறமை உடையவர்

வாயார் மனத்தால் நினைக்கும் அவருக்கு அருந்தவத்தில்
தூயார் சுடுபொடி ஆடிய மேனியர் வானில் என்றும்
மேயார் விடை உகந்தேறிய வித்தகர் பேர்ந்தவர்க்குச்
சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திரு நின்றியூரே

மணிவாசகப் பெருமானும் தனது நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் ஒரு பாடலில், சிவபெருமானை மெய்யடியார்களுக்கு அண்மையன் என்றும் ஏனையோருக்கு அரியவன், மற்றும் தொலைவில் இருப்பவன் என்றும் கூறுகின்றார். அண்மையன் என்றால் அருகில் இருப்பவன் என்று பொருள். குதிரை வாங்குவதற்காக தொண்டித் துறைமுகம் சென்று கொண்டிருந்த தன்னைத் தடுத்து ஆட்கொண்ட சிவபெருமான், தன்னை விட்டுவிடுதல் முறையோ என்று இறைஞ்சும் பாடல் இது. ஒண்மையன்=ஒளிப் பிழம்பாய் உள்ளவன்: உத்தூளித்தல்=மேலே பூசுதல்: பெற்றியன்=பெற்று இருப்பவன், இங்கே பெண், ஆண் மற்றும் அலி ஆகிய மூன்று தன்மைகளையும் பெற்றவன் என்று பொருள்.

ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
தொன்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அரிதாம்
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே

பொழிப்புரை

வெண்மையான ஒளியினை வீசும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் வைத்த சிவபெருமான், அடியேனின் உள்ளத்தில் புகுந்து, அடியேன் ஞானத்தை உணருமாறு செய்தார். மேல் உலகத்தில் நிலை பெற்று இருக்கும் சிவபிரான், நம்மைப் போன்ற அடியார்களுக்கு அருள் புரிவதற்காக, மீயச்சூர் போன்ற பல தலங்களை உறைவிடமாகக் கொண்டு அருள் பாலிக்கின்றார். இவ்வாறு அடியார்களுக்கு அருள் புரியும் அதிகை வீரட்டனார், தம்மை விரும்பும் அடியார்களுக்கு மிகவும் அருகில் இருக்கின்றார்: தன்னை விரும்பாத மாந்தர்களுக்கு சிவபெருமான் பெரிதும் தொலைவில் உள்ளவராக விளங்குகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.