மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!

8. வெண்ணிலா மதியம் தன்னை - பாடல் 5

உள்ளத்தில் இறைவன் பால் தீராத அன்புடன், அவனைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் நெஞ்சத்தில் இருப்பவர்,

Updated On :9 டிசம்பர் 2015, 9:32 am

பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார்

துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடைமுடி மேல் வைத்து

உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று

அத்தியின் உரிவை போர்த்தார் அதிகை வீரட்டனாரே

விளக்கம்

அத்தி = யானை: துத்தி = பாம்பின் படத்தில் உள்ள பொறிகள்: உத்தரம் = வடக்கு திசை:

பொழிப்புரை

உள்ளத்தில் இறைவன் பால் தீராத அன்புடன், அவனைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் நெஞ்சத்தில் இருப்பவர், படத்தில் பொறிகளை உடைய ஐந்து தலை நாகங்களைத் தனது சடையில் சூடியுள்ள சிவபெருமான் ஆவார். நமது நாட்டின் வடபகுதியில் உள்ள இமயமலையின் புதல்வியாக கருதப்படும் உமையம்மை நடுங்குமாறு, யானையின் தோலை உரித்து உடலில் போர்த்துக்கொண்ட சிவபெருமான், அதிகை வீரட்டானத்தில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.