(அதிகை வீரட்டம் - காந்தார பஞ்சமம்)
பின்னணி
சமணர்கள் செய்த சூழ்ச்சியால், நடுக்கடலில் கல்லுடன் கட்டப்பட்டு விடப்பட்ட அப்பர் பிரான், சிவபிரானின் கருணையால் கல்லே தெப்பமாக மிதக்க, திருப்பாதிரிப்புலியூர் (தற்போது கடலூர் என்று அழைக்கப்படும் நகரம்) தலத்தின் அருகே கரையேறினார். சிவபெருமான் பால் பெருகிய அன்புடன், அஞ்செழுத்து மந்திரத்தை போற்றியவாறு அப்பர் பிரான் கல்லின் மீது அமர்ந்திருக்க, நெடுங்கடலில் கல் மிதந்தது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். நான்முகன் முதலான பல அமரர்களால் போற்றப்படும் அஞ்செழுத்து மந்திரம் என்று இங்கே சேக்கிழார் கூறுகின்றார். பெற்றி = தன்மை.
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்
அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு
அரிய அஞ்செழுத்தையும் அரசு போற்றிடக்
நெடும் கடலினுள் கல் மிதந்ததே
சூலை நோயிலிருந்து தன்னை காப்பாற்றிய, அதிகை வீரட்டானத்துப் பெருமானாருக்கு, அதன்பின்னர் சமணர்களால் விளைந்த பல கொடிய கொலை முயற்சிகளிலிருந்தும் தன்னைக் காத்த அதிகை வீரட்டானருக்கு நன்றிகூறும் முகமாக, கரையேறியவுடன் அப்பர் பிரான் அதிகை சென்றார். அப்பர் பிரானின் வருகையை அறிந்த அதிகை நகர மக்கள், நகரை அலங்கரித்து, தெருக்களெங்கும் தோரணங்கள் கட்டி அவரை வரவேற்றனர். கொடிய சமணர்கள் செய்த தீய துன்பங்கள் எல்லாம், இறைவன் அருளால் அழியுமாறு வெற்றிபெற்ற தமிழரசர் வருகின்றார் என்ற மகிழ்ச்சியில் நகரத்து மக்கள் எல்லோரும் மங்கல வாத்தியங்கள் முழக்கி அப்பர் பிரானை வரவேற்றார்கள். மிறைகள் = துன்பங்கள்:
வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைகள் எல்லாம்
எஞ்ச வென்று ஏறிய இன்றமிழ் ஈசர் எழுந்தருள
மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம்
தம் செயல் பொங்கத் தழங்கொலி மங்கலம் சாற்றல் உற்றார்
தன்னை வரவேற்றத் தொண்டர்களோடும் அப்பர் பிரான் திருவதிகை வீரட்டானம் திருக்கோயிலின் உள்ளே நுழைந்து இறைவனை தரிசனம் செய்து பல பதிகங்கள் பாடி அருளினார். அத்தகைய பதிகங்களில் ஒன்று தான் இந்த பதிகம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் கெடில வாணரே என்று முடிவதால், இந்த பதிகத்தை கெடில வாணர் திருப்பதிகம் என்று அழைக்கின்றார்கள். வாழ்நர் என்ற சொல்லின் மருவு தான், வாணர் என்ற சொல். கெடில நதிக்கரையில் வாழும் இறைவன் என்ற பொருள் பட கெடில வாணர் என்று இங்கே கூறப்படுகின்றது. வாணரே என்ற சொல்லில் உள்ள ஏகாரம், வியப்பினை வெளிப்படுத்துகின்றது என்று திருமுறை மலர்கள் புத்தகத்தில் கி.வா.ஜா. அவர்கள் கூறுகின்றார்.
பாடல் 1
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்ய பொன்
கிளைத்து உழித் தோன்றிடும் கெடில வாணரே

விளக்கம்

முளைக்கதிர் = பெருமானின் திருமுடி மேல் வைக்கப்பட்ட பின்னர், முளைக்கத் தொடங்கிய பிறைகளைக் கொண்ட சந்திரன்: தக்கனின் சாபத்தால், ஒவ்வொரு கலைகளாக மறைந்து அழிந்து போகும் நிலையில் இருந்த சந்திரன் காப்பாற்றப் பட்ட நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படுகின்றது. உழி = இடம்: மழலை வீணை = மழலை மொழி போன்று இனிய குரல் எழுப்பும் வீணை: மண்ணினைத் தோண்ட நமக்கு செம்பொன் கிடைப்பது போன்று, நம்மைப் பற்றியிருக்கும் பாசம் மாயை ஆகியவற்றைத் தோண்டி எடுத்து வீசி எறிந்தால், ஆங்கே பெருமான் தோன்றுவார் என்பதை, கிளைத்து உழித் தோன்றிடும் கெடில வாணர் என்ற தொடர் உணர்த்துகின்றது. திளைத்ததோர் மான்மழுக் கையர் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். மான் கன்றுக்கு உரிய குணம், அங்குமிங்கும் துள்ளித் திரிந்து மகிழ்ந்து விளையாடுதல். அந்த குணத்தினை மாற்றி, கொலை வெறி கொண்ட மானாக மாற்றப்பட்ட, ஒரு மான் கன்று, தாருகவனத்து முனிவர்களால் சிவபெருமான் மீது ஏவப்பட்டது. மானின் கொடிய குணத்தினை மாற்றிய பெருமான், அந்த கன்றினை தனது கைகளில் ஏற்றிக் கொண்டார். மானும் மகிழ்ச்சியுடன் அவரது கரங்களில் அமர்ந்தது. அவ்வாறு மான் கன்று மகிழ்ச்சியில் திளைத்த செய்கை, இங்கே திளைத்ததொரு மான் என்று குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை

பெருமானின் திருமுடி மேல் வைக்கப்பட்டதால், கலைகள் தேயும் நிலை மாறி, கலைகள் முளைத்து வளரும் நிலைக்கு உயர்ந்த சந்திரன் மூழ்குமாறு, கங்கை வெள்ளத்தைத் தனது சடையில் தேக்கியவர் சிவபெருமான். அவரது கையில் மழலை மொழி போன்று இனிமையான ஓசையை எழுப்பும் வீணை உள்ளது: மற்றொரு கையில், பெருமானை வந்து அடைந்ததால் மிகவும் அதிகமான மகிழ்ச்சியில் திளைக்கும் மான் கன்று காணப்படுகின்றது. மற்றொரு கையில் மழு ஆயுதம் காணப்படுகின்றது. இத்தகைய அழகிய கோலம் உடைய கெடில வாணர், மண்ணினைத் தோண்டி எறிந்தால் செம்பொன் கிடைப்பது போன்று, தங்களது மனதினில் உள்ள பாசம் மற்றும் மலங்களைத் தோண்டி எறியும் மனிதர்களின் மனதினில் தோன்றுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை