விழுமணி அயில் எயிற்று அம்பு வெய்யதோர்
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழுமணி மிடற்றினர் செய்ய வெய்யதோர்
கெழுமணி அரவினர் கெடில வாணரே

விளக்கம்

விழுமணி = விழுமிய மணி, சிறந்த கருமணி: இங்கே கரிய நிறம் கொண்ட திருமாலை குறிக்கின்றது: அயில் = கூர்மை, தீக்கடவுள்: எயிறு = ஈர், காற்றுக் கடவுள்: கொழுமணி = அழகிய: நெடு வரை=மேரு மலை: வெய்யது (முதல் அடியில் வருவது) = வெப்பம் விளைவிப்பது: வெய்யது (மூன்றாம் அடியில் வருவது) = விருப்பம்; திரிபுரத்து அரக்கர்களுடன் சிவபெருமான் போருக்குச் சென்றபோது, தேவர்கள் பலரும் சிவபெருமானுக்கு உதவியாக போரினில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினார்கள். சிவபெருமான் பயன்படுத்த விரும்பிய அம்பின் தண்டாக திருமாலும், அதன் கூரிய முனையாக தீக்கடவுளும், அதன் இறக்கைகளாக காற்றும் பங்கேற்றன. இந்த செய்தி, இங்கே விழுமணி அயில் எயிற்று வெய்யதோர் அம்பு என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. இந்த தகவல் பல தேவாரப் பாடல்களில் கூறப் படுகின்றது.

ஞானசம்பந்தர் வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (1.11.6) தேவர்கள் திரிபுரத்து அரக்கர்களுடன் சிவபெருமான் தொடுத்த போரினில் பங்கேற்றமை குறிப்பிடப்படுகின்றது. எல் = ஒளிப்பொருள், ஒளிப் பொருட்களாகிய சூரிய சந்திரர்கள்: தேராம் = தேரின் சக்கரங்கள்: வல்லாய் எரி = விரைந்து பற்றும் தீ: ஈர்க்கு = இறகு; கோல் = நடுத்தண்டு; கல் = மேரு மலை: எயில் = கோட்டை; வல்வாய் என்றும் பாடம்.

கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர்
எல் ஆம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப
வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்
வில்லால் எயில் எய்தான் இடம் வீழீம் மிழலையே

மேற்கண்ட பாடலில் வானவர் வேண்டுகோளுக்கு ஏற்ப திரிபுரத்து அரக்கர்களுடன் சிவபெருமான் போருக்கு புறப்பட்ட போது அந்த தேரின் சக்கரங்களாக சூரியன் சந்திரனும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சாரதியாக பிரமனும், எளிதில் தீயினை உண்டாகும் வலிமை மிகுந்த தீக்கடவுள் அம்பின் கூறிய முனையாகவும், அம்பின் நடுத் தண்டாக திருமாலும், அம்பின் இறகுகளாக காற்றுக் கடவுளும், வாசுகி பாம்பு வில்லின் நாணாகவும், மேரு மலை வில்லாகவும், பங்கேற்ற செய்தி இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது.

ஆலம்பொழில் தலத்தின் மீது அப்பர் பிரானால் அருளப்பட்ட பதிகத்தின் பாடலிலும் (6.86.9) இந்த தகவல் கூறப்படுகின்றது. இந்த பாடலில் சிவபெருமான் கையில் இருந்த அம்பின் முனையாக தீக்கடவுளும், அம்பின் சிறகுகளாக காற்றுக் கடவுளும் இருந்ததாக குறிக்கப் படுகின்றது.

கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானைப்
பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானைப் பூண் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்பு எரி கால் ஈர்க்குக் கோலாக் கடுந்தவத்தோர் நெடும் புரங்கள் கனல் வாய் வீழ்த்த
செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

பொழிப்புரை

படுத்துக் கிடக்கும் கரிய மாணிக்கம் போன்ற திருமாலும், தீக்கடவுளும், காற்றுக் கடவுளும் சேர்ந்த கூரியதும், வெம்மை விளக்கக் கூடியதும் ஆகிய அம்பினை, அழகிய நீண்ட மேரு மலையை வளைத்துச் செய்யப்பட்ட வில்லினில் கோத்தவர், சிவபெருமான். அவர் செழுமையான கருமணி போன்ற கழுத்தினை உடையவர்: மிகவும் விருப்பத்துடன், அவர் சிவந்த இரத்தினங்களைக் கொண்ட பாம்புகளை அணிகலனாக அணிந்திருக்கின்றார். இத்தகைய தன்மை உடைய சிவபெருமான் கெடில வாணராக காட்சி அளிக்கின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை