மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!

9. முளைக்கதிர் இளம்பிறை - பாடல் 5

கூட்டமாக வந்துத் தன்னைத் தொழும் அடியார்களின் மேல் பரவக் கூடிய வினைகளைக் கழுவி அவர்களைத் தூய்மை ஆக்கும் கருணைச் செயல் புரிபவர் சிவபெருமான்.

Updated On :11 டிசம்பர் 2015, 9:55 am

குழுவினர் தொழுது எழும் அடியர் மேல்வினை
தழுவின கழுவுவர் பவள மேனியர்
மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக்
கெழுவின யோகினர் கெடில வாணரே

விளக்கம்

கெழுவின = பொருந்திய: பார்வதி தேவியை உடலில் பொருத்தியவாராக காணப்படினும், யோகம் செய்பவராக உள்ள தன்மை இந்த பாடலில் கூறப்படுகின்றது. பார்வதி தேவியோடு எப்போதும் கூடி இருந்தாலும் யோகத்தில் ஆழ்பவன் சிவபெருமான் என்பதை நமக்கு உணர்த்தும் பாடல் கங்கை கொண்ட சோளேச்சரம் மீது கருவூர்த் தேவர் அருளிய பதிகத்தின் கடைப் பாடலாகும். சிவபிரானைப் புகழ்ந்து பாடினால், நாம் இம்மையில் அரசர்களைப் போல சிறப்பாக வாழ்ந்து மறுமையில் அவனது அருட்கடலில் திளைப்போம் என்று கருவூர்த் தேவர் கூறுகின்றார்.

மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளரிளம் திங்கள் முடிமேல்
கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட சோளேச்சரத்தானை
அங்கை ஓடு ஏந்திப் பலிதிரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருட் கடலே

நல்லூர் பெருமணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.125) ஒரு பாடலில் சம்பந்தர் இறைவனை போகத்தன் என்று அழைத்து போகத்தன் யோகத்தையே புரிந்தான் என்று சொல்கின்றார். பந்தித்த = கச்சாக கட்டிய: அம்மையுடன் கூடி இருக்கும் கோலம் போகத்தன் என்று உணர்த்தப்படுகின்றது. உமையம்மையுடன் கூடி இருக்கும் கோலம், இறைவன் போகத்தனாக இருப்பது போல் தோன்றினாலும், அவன் உண்மையில் யோகம் புரிபவனாக உள்ளான் என்று சம்பந்தர் கூறுகின்றார். அவன் போகத்தனாக காணப்படுவது, உயிர்கள் போகத்தை அனுபவித்து, இனப்பெருக்கம் செய்து, இறைவன் உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப உடலுடன் பொருத்துவதற்கு கருவியாக இருப்பதற்குத்தானே.

மேகத்த கண்டன் எண்தோளன் வெண்ணீற்று உமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல
போகத்தன் யோகத்தையே புரிந்தானே

திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகர், இறைவன் உமை அம்மையுடன் இணைந்து இருப்பதன் காரணத்தை மிகவும் தெளிவாக கூறுகின்றார்.

தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி
பெண்பால் உகந்தினலேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

அனைவரும் யோகிகளாக இருந்தால், மனிதர்களின் இனப்பெருக்கம் தடைப்படும்; அதனால் மனித உடல்களுடன் இணைக்கப் பெறுவதற்கான தகுதியை அடைந்துள்ள ஆன்மாக்கள், தங்களது வினைத் தொகுதிகளுக்கு ஏற்றவாறு பொருத்தப்பட வேண்டிய மனித உடல்கள் இல்லாமல், அவதியுற்று, இறைவனை அடைய முடியாமல் போய்விடும். மனித வாழ்க்கை ஒன்றுதான் இறைவனை அடைந்து முக்தி பெறுவதற்கான எளிய வழி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே இல்லற வாழ்க்கையும் அவசியமானதுதான். ஆனால் இல்லற சுகத்தில் ஈடுபட்டு, இறைவனை ஒரே அடியாக மறந்துவிட்டால், நாம் நமது வினைகளைப் பெருக்கிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் அழுந்தி விடுவோம். அவ்வாறு இருக்கலாகாது என்பதை உணர்த்தும் முகமாக அப்பர் பிரான் போன்ற அருளாளர்கள் பெரும்பாலான பாடல்களில் இல்லற சுகத்தில் ஈடுபட்டு சிவபிரானை மறக்கலாகாது என்று கூறுகின்றார்.

இந்த பாடலில் அடியார் திருக்கூட்டத்தால் தொழப்படும் சிவபெருமான், அவர்களது வினைகளை முற்றிலும் களைவது மட்டுமன்றி, வரும் நாட்களில் அவர்கள் மீது படரக்கூடிய வினைகளையும் தவிர்ப்பவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அடியார் கூட்டத்துடன் இணைந்து செய்யப்படும் சிவ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனால்தான் மணிவாசகர், அடியார்களுடன் சிவபெருமான் தன்னைக் கூட்டியதை அதிசயம் என்று, அதிசயப்பத்து பதிகத்தில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் முதல் இரண்டு அடிகளில் தனது சிறுமையை உணர்த்தும் மணிவாசகர், அத்தகைய கடையேனை, அடியவர்களுடன் கூட்டியது இறைவனின் கருணையால் விளைந்த அதிசயம் என்று கூறுவதை நாம் உணரலாம். இறைவன் தனக்கு திருவடி தீட்சை அளித்தது, உபதேசம் செய்தது, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று சொல்லியதற்கு ஏற்ப குதிரைகள் அணிவகுத்து மதுரை வீதியில் வந்தது, பிட்டுக்கு மண் சுமந்தபோது பட்ட அடி அனைவரின் முதுகிலும் பட வைத்து அனைவரையும் உணரச் செய்தது, ஆகிய எந்த செயலையும் அதிசயம் என்று கருதாமல், தன்னை அடியார்களின் கூட்டத்துடன் கூட்டியதே அதிசயம் என்று மணிவாசகர் கருதுவதிலிருந்து, நாம் அடியார் கூட்டத்துடன் இணையும் பேறு கிடைத்தற்கு அரியது என்பதை புரிந்துகொள்ளலாம்.

நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவரொடும் கூடேன்
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனை என் அடியான் என்று
பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தரமாய் நின்ற
ஆதி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

திருப்பல்லாண்டின் ஒரு பாடலில் சேந்தனார், பழ அடியார்களுடன் கூடி பல்லாண்டு கூறுதுமே என்று பாடி, பழ அடியார்களை சிறப்பிக்கின்றார். பரம்பரை பரம்பரையாக சிவபெருமானுக்கு அடியார்கள் வழியில் வந்தவர்கள் பழ அடியார்கள். அவர்கள் தங்களது பெண்ணுக்கோ அல்லது பிள்ளைக்கோ, மணமுடிக்க, தங்களைப் போன்று பரம்பரையாக சிவபிரானைத் தொழும் குடும்பத்தில் உள்ள மகளை அல்லது மகனை மட்டுமே தேர்ந்து எடுப்பார்கள் என்று இந்த பாடலில் சேந்தனார் கூறுகின்றார்.

குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி

விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின்

மழவிடையாற்கு வழிவழி ஆளாய் மணம் செய் குடிப் பிறந்த

பழ அடியாரொடும் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே

பொழிப்புரை

கூட்டமாக வந்துத் தன்னைத் தொழும் அடியார்களின் மேல் பரவக் கூடிய வினைகளைக் கழுவி அவர்களைத் தூய்மை ஆக்கும் கருணைச் செயல் புரிபவர் சிவபெருமான். அவர் பவளம் போன்று சிவந்த மேனியை உடையவர்: கையினில் மழு ஆயுதத்தையும் மான் கன்றினையும் ஏந்தி காட்சி அளிப்பவர்: பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து இருந்தாலும், யோகத்தில் ஆழக்கூடிய வல்லமை படைத்தவர். இத்தகைய தன்மை உடைய சிவபெருமான் கெடில வாணராக காட்சி அளிக்கின்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.