மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!

9. முளைக்கதிர் இளம்பிறை - பாடல் 6

கங்கை போன்று புனிதமான நதி என்பதால் தென்திசை கங்கை என்று கெடில நதி அழைக்கப்படும் தகவலை அப்பர் பிரான் இந்த பாடலில் நமக்கு தெரிவிக்கின்றார்.

Updated On :12 டிசம்பர் 2015, 10:23 am

அங்கையில் அனல் எரி ஏந்தி ஆறு எனும்
மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை
நங்கையைப் பாகமும் நயப்பர் தென் திசைக்
கெங்கை அது எனப்படும் கெடில வாணரே

விளக்கம்

கங்கை போன்று புனிதமான நதி என்பதால் தென்திசை கங்கை என்று கெடில நதி அழைக்கப்படும் தகவலை அப்பர் பிரான் இந்த பாடலில் நமக்கு தெரிவிக்கின்றார்.

பொழிப்புரை

தனது அழகிய உள்ளங்கையில் அனலினை ஏந்தியவாறு ஆடும் திறமை பெற்றவர் சிவபெருமான். கங்கை ஆறாகிய மங்கையைத் தனது சடையில் அடக்கி, தன்னுடன் சேர்த்துக் கொண்டவர் சிவபெருமான்: புகழ் பெற்ற இமயமலையில் தோன்றிய பார்வதி தேவியை, தனது உடலின் இடது பாகத்தில் விருப்பத்துடன் வைத்து மகிழ்ந்து இருப்பவர் சிவபெருமான். இத்தகைய தன்மை உடைய சிவபெருமான், அதன் புனிதத்தன்மை கருதி தென்திசை கங்கை என்று அழைக்கப்படும் கெடில நதிக்கரையில் வாழ்பவராக காட்சி அளிக்கின்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.