பூண்ட தேர் அரக்கனைப் பொருவில் மால்வரை
தூண்டு தோள் அவை பட அடர்த்த தாளினார்
ஈண்டு நீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டு தேன் சொரி தரும் கெடில வாணரே

விளக்கம்

பூண்ட தேர் = அலங்கரிக்கப்பட்ட புட்பக விமானம்: பொரு இல் மால் வரை = பெருமையில் தனக்கு ஒப்பாக வேறு எந்த மழையும் இல்லாத கயிலை மலை: தூண்டு = எடுத்த: மேதி = எருமை ஈண்டு நீர் = பெருக்காக ஓடும் நீர்.

பொழிப்புரை

மிகவும் அழகாக அலங்காரம் செய்யப்பட்ட புட்பக விமானத்தை உடைய அரக்கனாகிய இராவணன், தனக்கு வேறு எந்த மலையும் ஒப்பில்லாத பெருமையினை உடைய கயிலை மலையைத் தனது தோள்களால் எடுக்க முயற்சி செய்தபோது, அவனது தோள்கள் நசுங்குமாறு கயிலை மலையைத் தனது கால் பெருவிரலால் அழுத்தியவர் சிவபெருமான். அத்தகைய வீரம் படைத்த சிவபெருமான், நீர் பெருகி ஓடும் நீர்நிலையில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்களின் மீது எருமைகள் பாய்வதால் தேன் வெளியே சிந்தும் அளவுக்கு, நீர் வளமும் நில வளமும் நிறைந்த கெடில நதிக்கரையில் கெடில வாணராக காட்சி அளிக்கின்றார்

முடிவுரை

சமணர்கள் தனக்கு அளித்த பல இடர்களிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிய சிவபெருமானின் அழகினை, பெருமையினை, மற்றவர்கள் அறியும் வண்ணம் எடுத்துரைக்கும் மிகவும் நயமான பதிகம். பதிகத்தின் ஏழாவது பாடலில், சிவபெருமானின் பெருமையை, அவரது முடிவில்லாத தன்மையை புரிந்து கொள்ளாமல் கேலியாக பேசுவோர்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தெய்வங்கள் என்று பிறரால் கருதப்படும் தேவர்களும் மனிதர்களும், நிலையற்றவர்கள் என்றும் சிவபெருமான் ஒருவனே என்றும் நிலையானவன் என்றும் உணர்த்தும் பாங்கு ரசிக்கத்தக்கது. சிவபெருமான் பூண்டுள்ள தலைமாலையில் உள்ள தலை சிரித்த வண்ணம் இருப்பதற்கு காரணமாக, பதிகத்தின் எட்டாவது பாடலில் கூறும் செய்திகள் அப்பர் பிரானின் நகைச்சுவை உணர்வையும், அவரது புலமையையும் எடுத்துக் காட்டுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை