மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!

7. வெறிவிரவு கூவிள - பாடல் 3

அழகு; சிந்தையில் தீர்வு = அடியார்களின் மனதினில் உள்ள குழப்பத்தைத் தீர்த்து, அறியாமையை ஒழித்து, ஞானம் மிளிரச் செய்தல்;

Updated On :20 நவம்பர் 2015, 6:42 am

முந்தி உலகம் படைத்தான் தன்னை மூவா முதலாய மூர்த்தி தன்னைச்
சந்த வெண்திங்கள் அணிந்தான் தன்னைத் தவநெறிகள் சாதிக்க வல்லான் தன்னைச்
சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச் செழுங்கெடில வீரட்டம் மேவினானை
எந்தை பெருமானை ஈசன் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

விளக்கம்

மூவா = மூப்பு அடையாத; சந்தம் = அழகு; சிந்தையில் தீர்வு = அடியார்களின் மனதினில் உள்ள குழப்பத்தைத் தீர்த்து, அறியாமையை ஒழித்து, ஞானம் மிளிரச் செய்தல்;

பொழிப்புரை

பண்டைய நாளில் உலகத்தை படைத்தவனும், மூப்பு மற்றும் பிணி அணுகாத உடலினை உடையவனும், எல்லோருக்கும் தலைவனாக விளங்குபவனும், அழகு நிறைந்த வெண் திங்களைச் சூடியவனும், அடியார்களின் தவத்திற்கு ஏற்ப அவர்களுக்கு நன்மைகள் அருளி அவர்களது தவத்தை முடிக்க வல்லவனும், அடியார்களின் மனதினில் உள்ள குழப்பத்தை நீக்கி, அவர்களது அறியாமை இருளை போக்கி, ஞானத்தை மிளிரச் செய்பவனும், தேன் போன்றும் பால் போன்றும் அடியார்களுக்கு இனிமையாக இருப்பவனும் ஆகிய பெருமான், செழுமை வாய்ந்த கெடில நதி பாயும் அதிகை வீரட்டனத்தில் உறைகின்றார். அவரது பெருமையினை அறியாமல், பண்டைய நாட்களில் நான் அவரை இகழ்ந்தது என்னே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.